ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிரதான சாலையாக தென்காசி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகிவிட்டது. ராஜபாளையம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நூற்பாலைகள், பஞ்சாலைகள், மற்றும் இதர பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகவும், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக வந்து செல்லும் பகுதியாகவும் ராஜபாளையம் நகரம் விளங்கி வருகிறது.

இதற்கு ஒரே சாலை தென்காசி சாலை மட்டுமே இருந்து வருகிறது. எனவே மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவது பெரும் சிரமமாகிவிட்டது.

எனவே போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சீமான் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடத்தை ஒதுக்கீடு செய்து கயிறு கட்டினார்கள். கயிறுகளை இறுக்கமாக அமைத்து அதற்கு உரிய வர்ணம் பூசி இறுக்கமாக அடித்து கயிருக்கு உள்ளாக வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை மீறுபவர்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *