பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை….
அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை….,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் உள்ள நீயூ டவுன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் வயது -47, இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி இரண்டு மகள்களும் உள்ளனர்.இவர் அய்யம்பேட்டை சாவடி பஜாரில் சென்ட்ரிங் காண்ட்ராக்ட் சாமான்கள் வாடகை கடை நடத்தி வருகிறார்.மேலும் இவர் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென தனது கடையில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.