தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பசாமி,பாரதி மோகன்,
ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர்
மாடசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வேல்ராஜன்,மணிபாரதி,
ஜெயக்குமார்,மாரியம்மாள்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து உள்ளனர் முடிவில் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி
நன்றி கூறினார்.