திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், வலங்கைமான் வட்டாரத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி புரியும் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சிறப்பு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி தலைமை வகித்தார்,
முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கதிரவன் அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவகுமார் முன்னிலை வகித்தார், தேசிய மதிய உணவு திட்டம் மேலாண்மை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு திட்டத்தின் கீழ் திருவாரூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன், ஆலங்குடி ஆரம்ப சுகாதார அலுவலர் சசிகுமார் உணவு தயாரித்தல் மற்றும் சுகாதாரம் பராமரித்தல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. முடிவில் உதவியாளர் மாரியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.