தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரம்:மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 2025 ஆம் ஆண்டு மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விழா கல்லூரி தலைவர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லூரிச் செயலாளர் .சுலைமான் தலைமையுரையாற்றினார். கல்லூரித் துணைத்தலைவர் தமிழரசன் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராகத் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.கிருஸ்துராஜ், கலந்து கொண்டு கல்லூரி தான் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கும். கல்வியும், ஒழுக்கமும் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து, வழமையான எதிர்காலத்தை உருவாக்கும். அதனால் இந்தக் கல்லூரிக் காலத்தை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களோடு கலந்துரையாடியும் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஞானாபாரதி.மற்றும் வி.அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்வியும் தன்னம்பிக்கையும், விடாமுற்சியும் ஒருவரை சாதனையாளராக்கும் என்று கருத்துரை வழங்கினார்.
சென்ற ஆண்டு பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப் பதக்கமும் மற்றும் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் வழங்கினார். ஆண்டு விழாவின் இறுதியில் கல்லூரி மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்