எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பொதுக்கூட்டம் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடகுடி வடபாதி ஊராட்சியில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜே பிரபாகரன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் தங்களது அடையாள அட்டைகளை ஒப்படைத்து தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்புராயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.