கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் உமா மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்.
கரூர் தாந்தோணி மலை உமா மருத்துவமனையில் இலவச எலும்பு,மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம் மருத்துவர் M. R மெய்யன்புராஜ்M. S(ortho)F. I. S. S(Spine), எலும்பு மூட்டு மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.
முகாமில் எலும்பு அடர்த்தியை கண்டறியும்4500 மதிப்புள்ளBMD பரிசோதனை செய்யப்பட்டன. கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி தண்டுவடம் மற்றும் எலும்பு சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் அனைத்து எக்ஸ்-ரே, M. R. I மற்றும் C T ஸ்கேன்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்பட்டன.
சர்ஜரி தேவைப்படுபவர்களுக்கு கட்டண சலுகை முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டன. உடன் சக மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.