பெரிய குளத்தில் எம்பி தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு பெரியகுளம் நகர திமுக மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் பெரியகுளம் நகர வடகரையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாத இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு நகர திமுக அவைத் தலைவர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார்
மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக் அப்துல்லா அனைவரையும் வரவேற்று பேசினார் பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் பெரியகுளம் ஒன்றிய திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்லப் பாண்டியன் ஆகியோர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்