திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை நான்கு ரோடு சந்திப்பு சிக்னலில் கோவையிலிருந்து பல்லடம் நோக்கி செல்ல இரண்டு இரு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. ஒரு இருசக்கர வாகனத்தில் இடுவம்பாளையத்தை சேர்ந்த சபரி மற்றும் காளீஸ்வரி என்பவர்களும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் செந்தில்குமார் மற்றும் வடமாநில தொழிலாளர் ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது கோவையிலிருந்து பல்லடம் நோக்கி அதி வேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களில் மீது பலமாக மோதியது. இதில் சபரி லாரியின் முன்னாள் டயரில் சிக்கி 200 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதேபோல் இரண்டு இரு சக்கர வாகனங்களில் பயணித்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதனிடையே லாரியின் டயரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சபரிக்கு இரண்டு கால்களும் முற்றிலுமாக நசுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி இருந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *