தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 472 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 472 கோரிக்கை மனு கொலை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து பாம்பு கடித்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலைகளயும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 15,750 மதிப்பிலான சக்கர நாற்காலி 3 நபர்களுக்கும் மனவளர்ச்சி குன்றியோருக்கான பாதுகாவலர் நிவாரண சான்று நான்கு நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ.மகாலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் தனித்துணை ஆட்சியர் சாந்தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி மிகச் சிறப்பாக செய்திருந்தார்