கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார்.
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம்,ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தெரிவிக்கையில்,கடலூர் வட்டம், ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வசித்து வரும் மணி மனைவி அசோதை (வயது 60) மற்றும் அவரது மகள் (ராயர் மனைவி)
ஜெயா (வயது 30) என்பவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இருந்தபோது கனமழையின் காரணமாக (22.10.2025, )காலை ஈரமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டதில் அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இத்துயர செய்தி அறிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க இறந்தவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பாக கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கனமழை காலங்களில் பொதுமக்கள் சேதடைந்த மற்றும் உறுதிதன்மையற்ற சுவர்கள் மற்றும் கூரைகள் உள்ள வீடுகளில் தங்குவதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது. கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் உள்ளனர்.