திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலின் ஆபத்தான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘அஞ்சு வீடு அருவி’ பகுதியில் தடுப்பு வேலி அமைக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக அஞ்சு வீடு அருவி உள்ளது. இருப்பினும், இந்த அருவி ஆபத்து மிகுந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இங்குப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் எதுவும் முறையாக அமைக்கப்படாததால், சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.
இதுவரை 14 பேர் நீரில் மூழ்கியும், தவறி விழுந்தும் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் அலட்சியமாகச் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையே காரணம்,” என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி மனு அளித்து ஆர்பாட்டாத்தில் ஈடு பட்டனர் .