தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி அங்குள்ள மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம், அரசு விரைவு போக்கு வரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய்தார்.
பின்னர் அனைத்து வழித்த டத்திலும் சிறப்பு பஸ்களின் இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்தார். முன் பதிவு செய் துள்ள பயணிகளிடையே பஸ் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக் குனர் சரவணன், மதுரை மண்டல பொது மேலாளர் மணி மற்றும் போக்குவரத் துக் கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.