திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார், உலகத் திருக்குறள் பேரவை மாநில துணைத்தலைவர் திருக்குறள் முருகானந்தம், எழுதமிழ் இயக்க தலைவர் குமாரசாமி, சிரா இலக்கியக் கழக தலைவர் கேத்தரின் ஆரோக்கியசாமி, அறிவாளர் பேரவை மதிப்புறு ஆலோசகர் அசோகன், திருக்குறள் பயிற்றகம் நாவை சிவம், ராசவேலர் செண்பகத் தமிழரங்கு பொறுப்பாளர் ராச. இளங்கோவன், இலக்கியவாசல் தலைவர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஜவஹர் ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நன்மாறன் சங்க ஆண்டறிக்கையினை வாசித்தார்.
விழாவில் விருது வழங்குதல், புரவலர் பட்டயம் வழங்குதல், மகளிர் சொல்லரங்கம், சிறப்பு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.
