கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.. அரசு பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டனர்
அங்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரை 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் அப்போதுதான் சில மணி நேரத்தில் பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீர் முழுவதும் அப்புறப்படுத்தப்படும் என்று அங்கு இருந்த அதிகாரிகளிடம் மேயர் ஜெகன் கூறினார்
அதன் பின்பு பள்ளி முழுவதும் எங்கெல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது என்று பார்வையிட்டார் அப்போது பள்ளி வளாகத்தில் 1960 இல் உள்ள ஒரு கல்வெட்டு பார்க்கப்பட்டது அதில் சி.வ. நகராட்சி பள்ளி என்று உள்ளது இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடம் பள்ளி தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுங்கள் பள்ளியை மாநகராட்சி வரும் காலத்தில் ஆவணத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
அதன் பின்பு மாநகராட்சி மேயர் ஜெகன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சி.வ.பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப்பகுதியில் உள்ளது பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சில மணி நேரத்தில் தண்ணீர் முழுவது அப்புறப்படுத்தப்படும் இங்கு அதிகாரி அலுவலகம் உள்ளது ஆவணங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 21 பள்ளிகள் உள்ளது
சிவந்தா குளம் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றன என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார் நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
