மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்துப்பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையன்றும். அதற்கு அடுத்த நாளும் மதுரை மாதகரில் ஆண்டுதோறும் 3 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் குப்பை சேரும். பட்டாசு குப்பை மட்டுமே 1,700 மெ. டன் சேரும். இந்தக் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் முதல் அகற்றத் தொடங்கும் ஆனால், இந்த முறை ஆணையர் சித்ரா தீபாவளியன்றே ஷிப்ட் அடிப்படையில் தூய்மைப் பணியை மேற் கொள்ள நகர் நலப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தீபாவளி நானிலும் நேற்று முன்தினம் தூய்மைப்பணியாளர்கள் தூய்மைப்பணியைத் தொடர்ச்சி யாக மேற்கொண்டனர்.
தீபாவளியை குடும்பத் தினருடன் கொண்டாடாமல் நகரின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கடமை தவறாமல் பணியாற்றினர்.
நேற்று அதிகாலை முதல் இரவு வரை மாநகர் பகுதியில் மழை பெய்துகொண்டே இருந்தது. ஆனாலும் தூய்மைப் பணியாளர்கள். நகரின் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய பட்டாக குப்பைகளையும், வழக்கமான குப்பைகளையும் அகற்றினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மதுரை நேதாஜி சாலையில் மாநகராட்சி ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் மற்றும் நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் குப்பை அகற்றும் பணியைப் பார்வையிட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும். விளக்குத் தூண், மாசி வீதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு தூய்மைப் பணியாளர்களுடன் கைகோத்துப் பணிபுரிந்தனர். தீபாவளி பண்டிகையின்போது கொண்டாட்டத்துக்கு முக்கியத்துவம் தராமல் தூய்மைப்பணிக்கு முக்கியத்துவம் அளித்த தூய்மைப் பணியாளர்களைப் பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.