பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல், அணிகுருந்தான் கடம்போடை உட்பட அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, அத்தியாவசிய தேவைக்கு பொருட்கள் வாங்குவதற்கு கூட பஸ்சில் செல்வதற்கு தேரிருவேலியில் காத்திருந்து முதுகுளத்துார், ராமநாதபுரம், பரமக்குடி செல்கின்றனர்.
இங்கு பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மழைக்காலங்களில் சாலையோரத்தில் காத்திருந்து பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரோட்டோரத்தில் இருந்த கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரோடு அகலமாக போடப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை பயணியர் நிழற்குடை கட்டப்படவில்லை.
தினந்தோறும் மக்கள் ரோட்டோரத்தில் ஆபத்தான நிலையில் காத்திருந்து செல்கின்றனர். எனவே தேரிருவேலியில் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாவட்டநிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .