பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெற்ற தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இருப்பிடத்திலிருந்து புனிதப் பயணம் சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பிய வரை பயணித்த அனைத்து பயணச்சீட்டுகள் (பேருந்து/ரயில்/ பயணச் சீட்டுகள்), நாக்பூரில் தொகை செலுத்தி தங்கியிருப்பின் தங்கிய இடத்தில் செலுத்திய தொகைக்கான இரசீது, புனிதப்பயணம் நிறைவுச் சான்றிதழ் (படிவத்தில்), பயணம் மேற்கொண்ட அனைவரின் ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர் புத்த மதம் என்பதற்கு ஆதாரமாக ஒரு சான்று ஆகிய சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *