பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

பெரம்பலூர்.அக்.23.பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைப்பெற்று வருகிறது. தற்போது அக்டோபர்-2025 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தபட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துகொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்ய வேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் வருகின்ற 24.10.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *