அரியலூர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்கிட வேண்டும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்
மூன்று ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு கால முறை ஊதியத்திலும் பத்தாண்டுகள் பணி முடித்து வர்களை கால முறை ஊதிய கட்டுக்கும் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெரும் ஊதியத்தை வழங்கிட வேண்டும்
என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினார் இதில் ஊராட்சி செயலாளர்கள் தூய்மை காவலர்கள் மக்கள் நல பணியாளர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் கணினி உதவியாளர்கள் சுகாதார உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் கிராம சுகாதார ஊக்குனர்கள் கலந்து கொண்டனர்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மூணாம் கட்டமாக அடுத்த மாதம் 24 ஆம் தேதி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்