மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது.
அனைவரும் முழு ஓத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் மேயா் ஜெகன் பெரியசாமி பேச்சு தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் மாநகராட்சி பகுதியில் கடந்த 20 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் ெபாதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். மாதத்தில் ஒரு நாள் மாநகராட்சியிலும் மாதாந்திரகூட்டமும் நடைபெறுகிறது