எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். கந்த சஷ்டி விழா 22 ஆம் தேதி முதல் சிறப்பு வழிபாடுடன் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து.திருக்கல்யாண வைபவத்திற்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் கங்கணம் கட்டுதல் மாலை மாற்றுதல் ஊஞ்சல் உற்சவம் பின் தங்க திருமாங்கல்யத்தை கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி, ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் மாங்கல்யம் தானம் செய்து சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வைத்தனர்.
இந்த திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருக்கோயில் பணியாளர்கள்அறங்காவல குழுமற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.