திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேல்மலை கிராம மக்களின் அன்றாடும் மிகுந்த சிரமப்பட்டு அனுபவித்து வரும் துன்பங்களை பற்றி, விவாதிக்கப்பட்டது
குறிப்பாக வன விலங்குகள் ஊர் பகுதிகளில் சுற்றி சேதத்தை ஏற்படுத்துவதை தடுக்க கோரியும் வனத்துறை, மின்சாரத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகிய வற்றால் படும் அல்லல்கள் சம்பந்தமாகவும் திரு கே. சந்திரசேகர் மற்றும் விவேக், கணேஷ் பாபு மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கலந்து கொண்டு தேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அல்லது மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என நேரடியாக உயர் அதிகாரிகள் முன் கூறினர்,
அடுத்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் அதிகமாக திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தாங்கள் அளிக்கும் உரிய கோரிக்கைகளுக்கு தங்களால் முடிந்த அளவு உடனடி தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்தனர்.