கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்களுக்கான திறன் மேம்பாட்டு கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் உக்கடம் தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..
கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜி. முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற முகாமை மதுக்கரை நகராட்சி 8 வது வார்டு கவுன்சிலர் இராயப்பன் துவக்கி வைத்தார்.
இதில் மயிலேறிபாளையம் ஊராட்சி கவுன்சிலர் செந்தில் குமார்,லயன் அருள் தாஸ் மற்றும் மதுக்கரை இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
முகாமில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக துணை இயக்குனர் வளர்மதி,அரசினர் தொழில் பயிற்சி கல்லூரி ,பயிற்சி அலுவலர் லலிதா,துணை பயிற்சி அலுவலர் பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டு அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் கல்வி பாடத்திட்டங்கள் குறித்தும் ,அதில் பயிற்சி முடித்தால் பெண்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் இதில் பெண்களுக்கு உள்ள சலுகைகள் குறித்தும் எடுத்து கூறினர்..
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர்..
தொடர்ந்து கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது..
இதனை தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழக அரசு பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர்,இதற்கு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,கோவையில் பல்வேறு கட்டங்களாக ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக குரும்பர் சமுதாய பெண்களுக்காக இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுவதாக தெரிவித்தார்..