தென்காசி,
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில். 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சட்ட சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது :-

எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையும் உச்சந்தலையைப் போல உள்ளத்தையும் இதமாக்கும் குற்றாலமும் – இப்படி தூறலும் சாரலும் கொண்டு மக்கள் மனங்களை குளிர்விக்கும் மண் இந்த தென்காசி மண்.

வடக்கே ஒரு காசி என்றால், தெற்கே ஒரு தென்காசி என்று சொல்லத்தக்க வகையில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட கோவில் குடமுழுக்கை 19ஆண்டு களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்திய மகத்தான அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு. அதிலும், இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, ஆலங்குளத்தில் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் கடந்த மாதம் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் பேசிய அன்பு மகள் பிரேமா அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வீடு வழங்கக்கூடிய ஆணையை நாங்கள் வழங்கினோம். இப்போது விரைந்து அங்கு வீடு கட்டக்கூடிய பணி வேகம், வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல, இப்போது மேடையில், 1 இலட்சமாவது பயனாளியான இலத்தூர் கிராமத்தைச் சார்ந்த சுமதி முத்துக்குமார் என்பவரின் கனவு இல்லத்திற்கான சாவியை உங்கள் முன்னால் நான் வழங்கியிருக்கிறேன்.

காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும் தலைக்கு மேல் ஒரு கூரையும் வேண்டும் என்பது, ஒவ்வொரு மனிதனின் கனவு! வீடு என்பது ஒவ்வொருடைய குடும்பத்தின் கனவு!

குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகளை கட்டித் தரவேண்டும் என்று குடிசையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று ஏராளமான திட்டங்களை உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி தான் தலைவர் கலைஞரின் கனவையும் ஏராளமான குடும்பங்களின் கனவுகளையும், ஒருசேர நிறைவேற்றுகின்ற மகிழ்ச்சியோடு உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் செயல்படுத்தி வரக்கூடிய ஊரக உள்ளாட்சித் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவீரன் பூலித்தேவன் தளபதி ஒண்டிவீரன் – தேவநேயப் பாவாணர் போன்ற பெருமக்களைத் தந்து பெருமைகளை கொண்ட இந்த தென்காசி மாவட்டத்தில் மகத்தான அரசு விழாவை மாபெரும் மக்கள் திருவிழாவாக மாநாட்டைப் போல ஏற்பாடு செய்திருக்கிறார் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவருடைய அரசியல் பொதுவாழ்க்கையில் இதைப் போல, எத்தனையோ பிரமாண்டமான மாநாடுகளை, நிகழ்ச்சிகளை அவர் நடத்தி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி எல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பதைப் போல அமைந்திருக்கிறது

வருவாய்த் துறை அமைச்சராக அவரின் மகத்தான சாதனை என்ன தெரியுமா? இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இவருடைய காலத்தில் ல்தான் தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 743 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி இருக்கிறோம்!

அதேபோல, 9 இலட்சம் முதியோருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது. வருவாய்த் துறை சார்பில், 17 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் விண்ணப்பித்த நான்கரை இலட்சம் பேருக்கு சான்றிதழைத் தராமல் வைத்திருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் சான்றிதழை வழங்குவதுதான் இந்த சாத்தூராரின் சாதனை!

இப்படி தன்னுடைய அனுபவத்தாலும், அமைதியான செயல்களாலும் அரசுக்கு நற்சான்றிதழை பெற்றுத் தந்திருக்கக்கூடிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

அதேபோல, சிறப்பாக பணியாற்றியிருக்கக்கூடிய தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்ஏ.கே. கமல் கிஷோருக்கும் தென்காசி மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும். நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டை அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம்.

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதை நோக்கமாக கொண்டு. அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். நீங்கள் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்… தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்… தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இதுபோன்ற அரசு விழாக்களில் நான் பங்கேற்று, அந்தந்த மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்!

நான் முதலில் சொன்னது போல, மகத்தான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி! மக்களைக் காக்கவே இந்த ஆட்சி! மக்களை வளர்க்கவே இந்த ஆட்சி! மக்களுக்கு தேவையானதை கொடுக்கவே இந்த ஆட்சி! இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும்! தொடரும்! தமிழ்நாட்டின் வளம் பெருகும்! பெருகும்! என்று சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்! இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் கே என் நேரு,ஐ.பெரியசாமி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ராஜ கண்ணப்பன், மனோதங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி, நெல்லை ராபர்ட் ப்ரூஸ் தென்காசிடாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கரன்கோவில் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் சதன் திருமலை குமார் தென்காசி எஸ் பழனி நாடார் பாளையங்கோட்டை அப்துல் வஹாப் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பி.ஜெயச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *