கடலூர் மாவட்டம் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றதுமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 01.01.2026–ஐ தகுதி நாளாக கொண்டும், 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்,2026 தொடர்பான பணிகள் 28.10.2025முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு நடைபெற்றது.

மேற்படி, 2002-இல் நடைபெற்ற தீவிர திருத்த வாக்காளர் பட்டியலானது இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் ( https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx )
மற்றும் கடலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *