ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் 118 வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு நேற்று பஸ்நிலையத்தில் உள்ள அண்ணாரின் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பெண்கள்பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர் வீரமங்கைகள் சிலம்பாட்டம் கரகாட்டம் முதலியஆட்டங்கள் ஆடி வந்தனர் முதுகுளத்தூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுஇருந்தனர்