திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 68 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டன..
தொடர்ந்து நகரின் முக்கிய வீதி வழியாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன் தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக கட்சி நிர்வாகிகள் வருகை தந்து தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா மாவட்ட துணைச் செயலாளர் சிவா நகர செயலாளர் மிதுன் மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக வருகை தந்து தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தனர் தொடர்ந்து தவெக கட்சியின் புகழ் பாடும் விதமாக கட்சி நிர்வாகிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு விழாவில் கலந்து கொண்டனர்..