மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மதுரைஅரசு சுற்றுலா மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினார்.