திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை விளைச்சல் நீரில் மூழ்கி வீணாகி விட்டன,சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட மற்றும் நேரடி விதைப்பு செய்த பயிரும் அழுகி அழிந்து விட்டது!
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருந்த நெல் மூட்டைகளை விரைவாக கிட்டங்கி களுக்கு இயக்கம் செய்யாததால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்!
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றிற்கு ₹30000/- நிவாரணமாக வழங்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! த.வி.நலச்சங்க தலைவர் திரு சேதுராமன் தலைமை வகித்தார்! செயலாளர் திரு.ராமமூர்த்தி, து.செயலர்.திரு சத்தியமூர்த்தி திரு குமரேசன், அலிவலம் ரவி,ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,திரு பக்கிரிசாமி,திரு.கோ.சி.மணி ஆகியோர் நன்றி கூறினார்கள்