பத்தாண்டு அதிமுக ஆட்சியில் நீங்கள் அலைந்தும் கோரிக்கை நிறைவேறவில்லை நான்கு ஆண்டு திராவிட மாடலா ஆட்சியில் உடனுக்குடன் கோரிக்கை
நிறைவேற்றப்பட்டு உங்கள் வீடு தேடி வருகிறோம் மேயர் ஜெகன் தமிழக அரசு அறிவித்த நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது அந்தந்த வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்று மக்களிடம் குறைகளை கேட்டு அறியப்பட்டது
இந்த நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு மாநகராட்சி பூங்காவில் வைத்து வார்டு சிறப்பு கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் ஆணையர் பிரியங்கா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது