கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பச்சை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி திருக்கோவில்களை . கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்களால் பராமரிக்கப்பட்டு, தீமிதி உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களிலும் கணக்கு வழக்குகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் எழுந்த நிலையில்.
கோவிலை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர் அப்பொழுது கோவிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி ஆபத்தானபுரம் கிராம மக்களும் இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அதிகாரிகளை கோவிலில் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் தள்ளுமுள்ளாக முடிந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை இழுத்துப் பூட்டினார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின் பொழுது பெண்கள் சிலர் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பதட்டமான சூழல் நிலவியது,மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர், 68 பேர்களை, குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்,
இந்த நிலையில் கோவில் நிர்வாக தரப்பினர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையானை பெற்றதால்,அறநிலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.வழக்கு பதிவு செய்யப்பட்டு,கைது செய்யப்பட்ட கிராம மக்கள், மற்றும் பாஜக, இந்துமுன்னணியினர் விடுதலை செய்யப்பட்டனர்.