அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த தர்னா போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கினார்
மக்கள் நல பணியாளர் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார் செயலாளர் ஜோதிவேல் கலியபெருமாள் மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள் சுமார் ரெண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
திமுக அறிவித்த 2021 தேர்தல் கால வாக்குறுதிகளை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றி தர வேண்டும் அனைத்து துறை வாரி சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் மத்திய அரசு அறிவித்துள்ள 3 சதவிகிதம் அகவிலை படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் சுமார் 2 மணி நேரம் அரியலூரில் நடந்தது