தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை
தூத்துக்குடி முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் 3வது மைல் அருகே அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் ராஜா, எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாவட்ட துணை தலைவர் ஜெபராஜ், சின்ன காளை மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில்பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, மாநில அமைப்புசாரா செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, இளைஞர் காங்கிரஸ் மண்டல தலைவி கமலா தேவி, மாவட்ட செயலாளர் ரெனிஷ் பாபு, மீனவரணி நகரத் தலைவர் சிமியான், வார்டு தலைவர்கள் சுப்பிரமணி, ராஜரத்தினம், கிருஷ்ணன், முனியசாமி, அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.