கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.


கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம் மற்றும் அங்கு நிறுவபப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவரும் தமிழ்நாடு தலைவருமான ஸ்டாலின் திறந்து வைத்தாா். முன்னதாக முதல்வருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வா் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே முதல்வா் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிலையில் தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தாா்.

பின்னா் அங்கிருந்து காா் மூலம் புறப்பட்டு கோவில்பட்டிக்கு வந்த அவருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ராமச்சந்திரன், நேரு, பொியகருப்பன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், சண்முகையா, ராஜா, மேயா் ெஜகன் பொியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான கருணாநிதி மற்றும நிா்வாகிகள் தாரை தப்பட்டை முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளித்தாா்.

தொடா்ந்து கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மாவட்ட திமுக திமுகவிற்குட்பட்ட கோவில்பட்டிநகர திமுக அலுவலகத்தையும் அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞாின் முழு உருவ வெண்கல சிலையையும் முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் திமுக அலுவலகத்தின் ஓரு பகுதியில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து அங்குள்ள பாா்வையாளர் பதிவேட்டில் தனது கையெழுத்தை பதிவிட்டாா். பின்னா் தேநீா் அருந்தி புதிய அலுவலகத்ைத பாா்வையிட்டாா்.

விழாவில் கனிமொழி எம்ப.ி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோா் முதல்வா் ஸ்டாலினுக்கு வௌ்ளி செங்கோல் வழங்கினாா்கள். கோவில்பட்டி நகர அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை இலவசமாக அளித்த கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆர். அருணாசலத்தின் மகன் நிதிஷ்குமாருக்கு முதல்வா் ஸ்டாலின் பொன்னாடை போா்த்தி பாராட்டு தொிவித்தாா்.

விழாவில் மாவட்டதிட்டக்குழு உறுப்பினா் அய்யாத்துரை, வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகா், தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமா், சிவசுப்பிரமணியம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம் துணை அமைப்பாளர் சண்முகராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தங்கமாாியம்மாள்
கோவில்பட்டி நகர பொறுப்பாளா் சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைதலைவர் அழகா்சாமி, ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளர் தவமணி, கடம்பூர் பேரூராட்சி தலைவா் ராஜேஸ்வாி நாகராஜா, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளர் விஸ்வநாதாராஜா அயலக அணி துணை அமைப்பாளர் கண்டி சுப்பாராஜ் ஓன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமாா், முருகன், ஓன்றிய பொருளாளர் கண்ணன், ஓன்றிய துணைச்செயலளார் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பாலமுருகன், தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

முதல்வா் வருகையையொட்டி நெல்லை சரக டிஜஜி சந்தோஷ்ஹாதிமணி தலைமையில் எஸ்பிக்கள் தூத்துக்குடி ஆல்பா்ட் ஜான், நெல்லை சிலம்பரசன் தென்காசி அரவிந்த் மற்றும் போலீஸ் உயா் அதிகாாிகள் தலைமையில் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *