தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் அதிமுக உரிமை மீட்பு குழுவினர் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அரசு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், இன்று கோபிசெட்டிபாளையத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டார். அவர் தாராபுரம் வந்தவுடன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் சண்முகம் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.கே. காமராஜ் ஆகியோர் தலைமையில்,
300-க்கும் மேற்பட்ட அதிமுக உரிமை மீட்பு குழுவினர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
செங்கோட்டையனை வரவேற்க, தொண்டர்கள் அனைவரும் அதிமுக கொடியை கையில் ஏந்தியவாறு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பழனி சாலையில் இரண்டாவது வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது செங்கோட்டையன், தனியார் உணவகத்தில் தேநீர் அருந்துவதற்காக தங்கியிருந்தபோது, அங்கிருந்த கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
பின்னர், அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “செய்தியாளர்களுக்கு எனது வணக்கம். நான் தற்போது பேட்டி அளிக்க விரும்பவில்லை. எனது கடமை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் செல்வதே,” என கூறினார்.
பின்னர் அவர், தனது குழுவினருடன் வாகனங்களில் ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
தாராபுரத்தில் நடந்த இவ்வரவேற்பு நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி, தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உற்சாக சூழலை ஏற்படுத்தினர்.