தஞ்சையில் பெரிய கோவில் கட்டிய ராஜராஜசோழனின்
1040 வது சதய விழா 31.10.2025 அன்று கொன்டாடபடுகிறது. .
1974 ஆம் ஆண்டு தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். நடராஜன் அவர்களை தலைவராக கொன்டு ராஜராஜன் சிலை அமைப்பு குழு அமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டது.
அந்த சிலை அமைந்துள்ள இடம் எந்தவித பராமரிப்பும் இன்றி காண படுகிறது தினசரி பல்லாயிரக்கணக்கான
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வருகை தரும் நிலையில்.ராஜராஜ சோழனை பற்றிய வரலாற்று சுருக்கங்கள். சிலை அமைக்கபட்ட விபரங்களை சிலை அமைந்திருக்கும் பகுதியில் அமைத்திட கேட்டு கொள்வதுடன்.
1878 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய ரானி காமாட்சி அம்பாபளி ஆங்கிலேய அரசுக்கு தஞ்சையில் மருத்துவமனை கட்ட பெரிய கோவில் அருகே 40 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். அதன்பிறகு தஞ்சையை ஒட்டியுள்ள திருப்பனந்தாள் ஆதீனம். பொறையார், கபிஸ்தலம், பூண்டி ஆகிய பகுதிகளை சார்ந்த மிராசுதார்கள் பங்களிப்பால் மருத்துவமனை கட்டபட்டது
அவர்கள் நினைவாக.ராஜா மிராசுதார் மருத்துவமனை என பெயர்சூட்டபட்டு தினசரி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
புகழ் வாய்ந்த இந்த மருத்துவ மனை சாலைக்கு அரசு, ரா, மி.மருத்துவமனை சாலை என வழிகாட்டி பலகை வைத்துள்ளது, வேதனையளிக்கிறது.
மேலும் பெரிய கோவில் எதிரே சோமசுந்தர பத்தர், ராமலிங்கபத்தர் போன்ற நிலசுவான்தார்கள் 25 ஏக்கர் நிலம் தந்து மருத்துவம் சார்ந்த பணிகள், செவிலியர்கள் பயிற்சி போன்றவற்றிற்
க்காக கலை நுட்பத்துடன் கட்டிடங்கள் கட்டப்பட்டன
தற்போது அந்த கட்டிடங்கள் மீது சம்பந்தபட்ட துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டமிட பட்டு மரம், செடிகள் வளர்க்க பட்டு வருகின்றன, இதேபோல் பெரிய கோவி லிருந்து சோழன் சிலை வழியாகசிவகங்கை பூங்கா செல்லும் வழியில் இருந்த நேதாஜி பூங்கா பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது
அந்த இடத்தில் நேதாஜி பெயரில் நீறூற்றுடன் கூடிய ரவுன்டானா அமைத்தால் அந்த பகுதி போக்குவர்த்திற்க்கு பாதுகாப்பாகவும் இருக்கும் அது தவிர அருகில் உள்ள சிவகங்கை பூங்காவிற்க்கு செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, என முழுதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கவும், பெரிய கோவில் எதிரே பாழடைந்து கட்டிடங்களைவிரைந்து சீரமைக்கவும்,ராஜராஜசோழன் சிலை அமைந்துள்ள இடத்தில் சிறப்பான பூங்கா அமைத்து பராமரிக்கவும். ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றுடன், சோழன் சிலை அமைய காரணமாக இருந்தவர்களின் பெயர். விபரங்கள் கொண்ட பலகை அமைத்திட வேண்டுமெனவும் துறை சார்ந்த அதிகாரிகளை தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்