மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்றுரைத்த தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு இன்று மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் குட்டி என்ற எஸ்.ஞானசீலன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
அத்துடன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து பெண்களால் முளைப்பாரி எடுக்கப்பட்டு பொங்கல் வைத்து.பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
செய்தியாளர்: A. ராஜபாண்டியன் மதுரை.