தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும், தேவர்காலனி பகுதியில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன் அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர். நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன் நிர்வாகிகள், மகளிர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனா்.