துறையூர் 
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 13வது வார்டில் ஸ்ரீ பாக்கியலட்சுமி திருமண மஹாலில் 28/10/2025 அன்று நகர்மன்ற உறுப்பினர் அம்மன் பாபு தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 13 வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் கழிவு நீர் கால்வாய், சாலையை மேம்படுத்தவும், காவிரி குடிநீர் மேம்பாடுத்துதல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு மக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீர்மானத்தில் ஏற்றப்பட்டது. 
இதில் நகராட்சி ஆணையர் கண்ணன்,சுகாதார ஆய்வாளர்கள் முரளி, மோகன்ராஜ், நகர ஆய்வாளர் கலைப்பிரியன், மேற்பார்வையாளர் சரவணன், மேஸ்திரி மணி மற்றும் ராஜ மணவாளன், கோவிந்தராஜ் ,தமிழரசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
