தஞ்சாவூர்’பண்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில், நுாலகத்தின் பங்கு முக்கியமானதாகும்’ என, கவிஞர் பகுத்தறிவு தாசன் தெரிவித்தார்.இவர் பெரியாரின் வழித் தோன்றல் போராளி.கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர், என்ற பன்முக திறமை கொண்டவர்.
பல்வேறு நூல்களை எழுதி சரித்திரம் படைத்துள்ளார். .தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆர் எம் எஸ் காலனியில் சொந்த இடத்தில் படிப்பகம் திறக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றிகவிஞர் பகுத்தறிவு தாசன் பேசியதாவது:
நுாலகம் இயக்கம் தற்போது விரிவாக விரிவடைந்துள்ளது. வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தாக்கம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது.இலக்கியம் படித்தவர்கள், மேன்மை அடைவதுடன், அடுத்தவர் துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் உருவாகும்.
நல்ல மனிதனை, பண்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் நுாலகத்தின் பங்கு முக்கியமானதாகும்.தற்போது படிப்பகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதன் வாயிலாக இப்பகுதியில் இருந்து தலைசிறந்த கல்வியாளர்கள் உருவாக வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாகும். குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும், அதை குறும்படங்கள் வாயிலாக அவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நுாலகத்தில், ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன அதில், பெரியார் வாழ்க்கை வரலாறு,இலக்கியம் கவிதை சார்ந்த புத்தகங்கள் இடம் பெற உள்ளது என்றார்
