காஞ்சிபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் அஷ்ட பந்தன ஜீரண தாரண மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் பல்லவன் நகர் காமராஜர் தெருவில் அமர்ந்து அருள் பாதித்து வரும் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் பழமை வாய்ந்த ஆலயமாகும் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அஷ்ட பந்தன ஜீரணோதரன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் கடந்த 29ஆம் தேதி சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் மூலவர் கணபதி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் பல்லவன் நகர். காமராஜர் தெரு மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தனர். இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளை பெற்று சென்றனர்
