கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள் ரோந்து பணியின் போது ஒரு வயதான புலி உடலில் காயங்கள் ஏதுமின்றி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர் இந்நிலையில் அனைத்து உடல் பாகங்கள் அனைத்தும் உடம்பில் அப்படியே உள்ள நிலையில் இறந்ததற்கான காரணம் நாளை நடைபெறும் உடற்கூறாய்விற்கு பின்னர் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
