பெரம்பலூர். அக. 31பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளானிவிடுத்துள்ள அறிக்கையில் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள்:13.10.2025-இல், 2026 இல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப, நிகர் நிலை மூலம் (Online) விண்ணப்பங்களை வரவேற்கிறது .

தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும். முஸ்லிம் மதத்தினை சார்ந்த மத்திய /மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். www.hajcommittee.gov.in என்ற மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 03.11.2025 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.எனவே, இந்த வாய்ப்பை தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *