சர்தார் வல்லபாய் படேல்  பிறந்த நாளை  முன்னிட்டு ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கார்காணிப்பு பிரிவு சார்பாக 2025ஆம் ஆண்டிற்கு அக்டோபர் 27.10.2025 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
"விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு” என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 27.10.2025 முதல் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கலை பண்பாட்டு துறை குழுவினர்களை கொண்டு ஒயிலாட்டாம், தப்பாட்டம் மற்றும் நாடகம் மூலம் பொதுமக்களிடையே ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
