செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர். சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் எழுந்தருளியிக்கும் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷஷ்டி முன்னிட்டு நேற்று மாலை சூர ஸம்ஹாரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் ஊர் தலைவர்கள் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை கண்டு பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சிவசுப்பிரமணியனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று சொல்லியே வணங்கினர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உடன் கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் அனைவரும் வணங்கினர்
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த கல்யாண வைபவ நிகழ்ச்சிகளை. லட்சுமிநாராயணன் குடும்பத்தினர். மற்றும் பழனியப்பன் குடும்பத்தினர் இணைந்து. இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது