காரைக்கால் புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.
இந்த தொகுப்பில் சர்க்கரை 2 கிலோ சூரியகாந்தி எண்ணெய் 2 லிட்டர் கடலை பருப்பு ஒரு கிலோ ரவை,மைதா ஆகியவை வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.585 ஆகும். இவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது
இந்த நிலையில் தீபாவளி பரிசுத்தொகுப்பு வழங்கும் தொடக்க விழா காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளர் தெரு, நலன் குளம் தெரு, தேனூர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடையில் தீபாவளி பரிசு தொப்பை பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.