அ.சிராஜுதீன் மாவட்ட செய்தியாளர் கும்பகோணம்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கும்பகோணத்தில் எழுச்சி நடைபயணம்.

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பா.ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை கும்பகோணம் பகுதியில் நடைபயணம் செய்தார்.

அய்யம்பேட்டை பகுதியில் நடை பயணத்தை தொடங்கிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இரவு 8 மணி அளவில் கும்பகோணம் புதிய பஸ் நிலையப் பகுதியில் நடை பயணத்தை தொடங்கினார்.

பின்னர் அங்கிருந்து கும்பகோணம் – தஞ்சை சாலை வழியாக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மீன் மார்க்கெட், உச்சிபிள்ளையார் கோவில் மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பெரியகடை தெரு, கும்பகோணம் காந்தி பூங்கா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழி நெடுகளில் அனைவருக்கும் கை அசைத்து உற்சாக படித்தனார்.

வணிகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துனர். பின்னர் பெரிய கடை வீதியில் கிரேன் மூலம் ராட்சஷ மாலை அணிவித்தனர். அதன் பின்னர் கும்பகோணம் மடத்து தெரு பகுதியில் பிரசார வாகனத்தில் நின்று மக்களிடையே பேசினார்.

அவருடன்
பேரணியில் மாநில பொறுப்பளார் நரேந்திரன், அமர் பிரசாத் ரெட்டி, மாவட்ட மாநகரம் தலைவர்கள் வாசு வெங்கட்ராமன், பொன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சோழ ராஜன், விவசாய மாநில செயலாளர் பன்னை வயல் இளங்கோவன் உள்பட ஆயிரக்கனக்னோர் நடைபயணம் சென்றனர்.

முன்னதாக பா. ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், சிந்தனையாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் எஸ். கார்த்திக்கேயன்,
பா.ஜனதா தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்,
ஆகியோர் தலைமையில் நடைபயனத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு பிரதமர் மோடி, மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உருவம் பொறித்த பா.ஜ.க வண்ண நிற குடைகளை வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *