புதுச்சேரி

  • மாமல்லபுரத்தில் தேரோட்டம்
    மாமல்லபுரத்தில் தேரோட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நாளான தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து பரவசமடைந்தனர்
  • சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம்
    எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதி இராகுஸ்தலமான நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. சீர்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பொன்னாகவல்லி உடனாகிய நாகேஸ்வரமுடையார்கோயில் உள்ளது. இக்கோயில் ஆதிஇராகுஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தனிசன்னதியில் இராகு பகவான் அருள்பாலிக்கிறார்.இந்த கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மஞ்சள்,திரவியபொடி,பால்,தயிர், தேன்,பன்னீர்,பஞ்சாமிர்தம்,விபூதி,சந்தனம் முதலான நறுமன திரவியபொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் நாகேஸ்வரமுடையார்,நந்திபகவானுக்கு சிறப்பு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
  • புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்
    புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியில் வந்து மை வைத்த விரலைக் காட்டி விட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். புதுவை மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். வெற்றி வாய்ப்பு எனக்கு மிக பிரகாசமாக உள்ளது என்பதை நான் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நேரடியாக பார்த்துவிட்டு தான் இங்கு மடுகரைக்கு வந்திருக்கிறேன்என்று பாராளுமன்ற வேட்பாளர் வெ. வைத்திலிங்கம் கூறினார்
  • கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபோக விழா.
    திருவள்ளூர் கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோயில் பதினோராம் ஆண்டு திருக்கல்யாண வைபோக விழா வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது கொடூர் ஊராட்சி இந்த ஊரா ட்சி உள்ள கிருஷ்ணாபுரம் பகுதி யில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சை யாக நடைப்பெற்று வருகின்றது. இதனையடுத்து திருக்கல்யாண வைபோக விழாவை யொட்டி பந்த கால் நடும் பணி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மகா ஸ்ரீ ராஜாதி ராஜ அயோத்தி சேனாதிபதி ஸ்ரீ தசரத சக்கரவர்த்தியின் ஜேஷ்ட குமாரர் ரகு குல திலகம் ஸ்வாமி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் மஹா ஸ்ரீ ராஜாதி ராஜ மிதிலா சேனாதிபதி ஸ்ரீ ஜனக மஹாராஜ னுடைய புண்ய குமாரி சௌபா க்கியவதி ஸ்ரீஸ்தா… Read more: கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபோக விழா.
  • காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கனிமொழி பிரேம் தலைமை வகித்து மாணவர்கள் சாலையை கவனமாக பயன்படுத்த அறிவுரை கூறினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை சார்பில் தேசிய விருது பெற்ற புதுமை பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு, பாத சாரிகள் கோடு , தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி செய் முறையுடன் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை திருமதி பிரேமா செய்திருந்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் இந்துமதி, பிரியா, ஜமுனா ராணி, சித்ரா, காயத்ரி,ஸ்ரீ விஜயசேகரி, கௌரி, பூங்கொடி, சந்தியா, சரஸ்வதி, வளர்மதி, கவிதா மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.