- மயிலாடுதுறையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி – சர்டை அணிந்தபடி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். கால்டாக்ஸ் பகுதியில் தொடங்கிய மாரத்தான் ஓட்ட போட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரம் மணக்குடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் பூர்ணிமா மற்றும் டிஎஸ்பி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நல்லூர் பாலாஜி பள்ளியில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் பாராட்டு
வேப்பூர் வேப்பூர் அடுத்த நல்லூர் பாலாஜி மேல்நிலை பள்ளியில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாராட்டி பரிசளித்தனர்கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலை பள்ளியில் விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் இன்ட்ராக்டு சங்கம் தொடங்கபட்டது அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார் பள்ளி முதல்வர் ஷீலா அன்புக்குமரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஸ்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி சங்க முன்னால் தலைவர் ஜாகீர் உசேன் பாராட்டி பரிசு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஸ்டார் பிரபாகரன்,ஆடுகளம் பிரசன்னா,ஹாசன், லட்சுமணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- கொசவபட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, கொசவபட்டியில் உள்ள புனித உத்திரிய மாதா திருவிழாவை முன்னிட்டு 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக வாடிவாசல், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த பணிகளை திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல், கிழக்கு தாசில்தார் மீனாதேவி, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ நாகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்
மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை…. 23 பதக்கங்கள் வென்றனர் பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். நீச்சல் போட்டியில் மதுரை நீச்சல் வீரர்கள் தங்கம் 7, வெள்ளி 1, வெண்கலம் 15 என மொத்தம் 23 பதக்கங்களை வென்றனர்.14 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவர்கள் ஹர்ஷன் 2வெண்கலம், அரவிந்த் பிரசாத் தங்கம், விசுவாசன், ஆகாஷ் வெண்கலம் வென்றனர். நல்லமணி பள்ளி மாணவி கள் சாதனாஸ்ரீ, ஹாஷினி, கனிஷ்கா, ஹிரானிகா 4×100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே வெண்கலம் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஒ.ஏ. பள்ளி மாணவன் பவித்ரன் 4×100 மீ பிரிஸ்டையில் தங்கம், அதே பள்ளி மாணவியர் தான்யாஸ்ரீ 2 தங்கம், 2 வெண்கலமும்,…
Read more: மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்
- சிலம்பம் போட்டியில் வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளியில் யூனிவர்சல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பவுண்டேஷன் டிரஸ்ட் நடத்திய இன்டர்நேஷனல் சிலம்பம் மற்றும் கராத்தே ஓப்பன் சாம்பியன்ஷிப்- 2025 நடைபெற்றது. இப் போட்டியில் மலேசியா, சுசர்லாந்து மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு வயதினர் சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர். அப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த வர்ஷினி இரண்டாம் பரிசினையும், சபினயா, கௌசிகா மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் மூன்றாம் பரிசுகளை பெற்றனர். மேலும் இப் போட்டியில் மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா, உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, விளையாட்டு ஆசிரியை…
Read more: சிலம்பம் போட்டியில் வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
- மாதாக்கோட்டை லூர்து மாதா ஜல்லிக்கட்டு வீரர்கள் 358 போ் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். பிப்- 2. தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. திருவையாறு சட்டமனி உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்டி. கே .ஜி . நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஒன்றிய செயலாளர் அருளானந்த சாமி ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தனர். தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதையொட்டி நேற்றுஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் வாசித்து தொடக்கி வைத்தனர். இதை விழா குழு தலைவர் பொறியாளர் சௌரிராஜ், செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், பொருளாளர் சூசைராஜ், வல்லம் டி.எஸ்.பி.கணேஷ்குமார் ஆகியோர்உறுதி மொழி வாசிக்க மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி வாசித்து ஏற்றுக்கொண்டனர் தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 657 காளைகள் ஒவ்வொன்றாகத்…
Read more: மாதாக்கோட்டை லூர்து மாதா ஜல்லிக்கட்டு வீரர்கள் 358 போ் பங்கேற்பு
- அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய நூற்றாண்டு விழா… மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு திருவிழா கோலாகலமாக பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர், உதவி தலைமை ஆசிரியர் சின்ன ராசா, பேரூராட்சி மன்ற தலைவர் புனிதபதி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் ,சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினர். இதில் மாணவ மாணவிகளின் கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவி.அய்யாராசு, தமிழ்ச்செல்வன், மகேந்திரன், மாதவன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள்…
Read more: அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
- தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை
தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துத்தேவன் பட்டியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான தேனி மேல பேட்டை இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஏ 3 மாணவர் மாநில அளவில் நடைபெற்ற பாக்சிங் அண்டர் 17 போட்டியில் பங்கேற்று சில்வர் மெடல் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் அந்த மாணவரை இதேபோன்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும தலைவருமான கல்வி தந்தை ராஜமோகன் தலைமையில் பள்ளி செயலாளர் ஆர் கே சரவணகுமார் இணைச் செயலாளர்கள் கே வன்னிய ராஜன் டி அருண்குமார் பள்ளி முதல்வர் துணை முதல்வர்கள் பள்ளி விளையாட்டு துறை ஆசிரியர்கள் ஆகியோர் மனதார…
Read more: தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை
- கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கியவர்கள் மீது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டும்
தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் இடையேயான கபடி போட்டிக்கு பங்குபெற சென்ற மாணவிகள் கபடி விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி ஏற்பாடு செய்திருந்த நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளை சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் எம்.ஏ எம்.எல்.ஏ அவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனி வரும் காலங்களில் தன்னம்பிக்கை தைரியத்துடன் விளையாட வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கியவர்கள் மீது அந்த மாநிலத்தில் தமிழக அரசின் சார்பாக புகார் கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டும் மேலும் அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மத்திய அரசின் சார்பாக நேரலை செய்ய வேண்டும் இதற்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் நடவடிக்கை…
Read more: கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கியவர்கள் மீது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டும்
- லூர்து மாதா பேரவை சார்பில் மாதாகோட்டையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன- 29. தஞ்சை மாதாகோட்டையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மைதானத்தில் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது. காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுளளன. ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட உள்ளது. ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் வருவது வழக்கம். மேலும் காளையை அடக்க வரும் வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள்.…
Read more: லூர்து மாதா பேரவை சார்பில் மாதாகோட்டையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு
- கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள்
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி , ரோட்டரி கிளப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி மற்றும் டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி ஆகியோர் இணைந்து 5 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது.. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.. அதன்படி, குழந்தை மாணவ,மாணவிகளுக்கான 5 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக இதன் துவக்க விழா கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் பரசுராம் தலைமையில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் தொழிலாளர் நீதீமன்ற நீதியரசர் மேதகு அருணாச்சலம் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்ட்டர்ட் பிரசிடென்ட் வழக்கறிஞர் பிரபு சங்கர்,ஜி.எஸ்.டி.துணை ஆணையர் டோலா…
Read more: கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள்
- ராஜபாளையம் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி
ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.இதில் 5க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200 மாணவ ,மாணவிகள் பங்கு பெற்றன. வினாடி வினா ,நடனம் ,பேப்பர் ப்ரசெண்டேஷன் போன்ற பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவி பொன்சுவேதா வரவேற்புரையாற்றினார். முதல்வர் ஜமுனா தலைமையுரையாற்றினார்.கல்வி ஆலோசகர் சங்கரநாராயணன் ,துணை முதல்வர் மஞ்சுளா தேவி மற்றும் கணினி அறிவியல் துறை தலைவி தனலட்சுமி வாழ்த்துரை வழங்கினர்.மாணவி முத்துசெல்வி நன்றியுரை கூறினார்.
- தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி-
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கி பாராட்டினார் பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ஆயுதப்படை மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்படி அரை இறுதிப் போட்டிக்கு தகுதியான தூத்துக்குடி நகரம் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்ட காவல்துறை அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினர் வெற்றி பெற்றும், ஆயுதப்படை-II மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஆயுதப்படை-II அணியினரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். மேற்படி தூத்துக்குடி நகரம் மற்றும் ஆயுதப்படை-II அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை இன்று (20.01.2025) மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து…
Read more: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி-
- கரூரில் குதிரை பந்தயம் அமைச்சர் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் அரசு காலணி பகுதியில் கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று அரசு காலனி அருகே உள்ள மாபெரும் குதிரை பந்தயத்தை, தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். முதல் போட்டியான 26.புதிய குதிரைகள் அரசு காலணி முதல் எல்லமேடு வரை சென்று மீண்டும் அரசு காலனி வந்தடைந்தது.2வது போட்டி18.சிறியகுதிரை வகை அரசு காலனி முதல் குப்பிச்சிபாளையம். வரை சென்ற மீண்டும் அரசு காலனி பகுதி வந்துஅடைந்தது. 3வது போட்டி பெரிய குதிரை வகையானது அரசு காலனி முதல் வாங்கல் வரை. 10 Km சென்றடைந்து புதிய குதிரை முதல் பரிசுகரூர் பாரத் பஸ் கம்பெனி இரண்டாம் பரிசு தாஜ் ஆம்புலன்ஸ் பவானி,மூன்றாம் பரிசு சிவா மேட்டுப்பாளையம் சிறிய குதிரைமுதல்…
Read more: கரூரில் குதிரை பந்தயம் அமைச்சர் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்
- திருவாரூரில் காணும் பொங்கலை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயம்
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூரில் காணும் பொங்கலை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயத்தை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு. திருவாரூரில் ஆரூரான் விளையாட்டுக்கழகம் சார்பில் காணும் பொங்கலையொட்டி 40வது ஆண்டாக விளையாட்டு போட்டிகள் உலகப்புகழ்பெற்ற ஆழித்தேரோடும் நான்கு ராஜவீதிகளில் விமர்சையாக நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்களுக்கான சைக்கள் போட்டி, 100மீ, 400மீ, 1500 மீட்டர் என ஓட்டப்பந்தயம், நீச்சல்போட்டி, சிறியரக , நடுத்தர மற்றும் பெரிய குதிரை ரேக்களா ரேஸ், மாரத்தான் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட வீர, வீராங்கணைகள் பங்கேற்றனர். இப்போட்டிகளை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில இருந்து பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் வீதிகளில் திரண்டு நின்று கண்டுகளித்து விளையாட்டு வீரர்களை பலத்த கோஷங்களை எழுப்பி ஊக்குவித்தனர்.
- எஸ்.ஜி.கே. சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை சிலம்பம் போட்டி
தேனி அருகே கோடங்கிபட்டியில் எம்பி தலைமையில் சிலம்பம் போட்டி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போடி கிழக்கு ஒன்றியம் எஸ்.ஜி.கே. சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை சிலம்பம் போட்டி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது இந்த போட்டியில் தேனி திண்டுக்கல் மதுரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிலம்பப் பயிற்சி மையங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சிலம்பம் விளையாட்டு வீராங்கனை மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர் போட்டியில் மூன்று வயது முதல் 21 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள் இளைஞர்கள் இந்த சிலம்பம் சாதனை போட்டியில் பங்கேற்றனர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சிறப்பு கேடயங்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்…
Read more: எஸ்.ஜி.கே. சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை சிலம்பம் போட்டி
- புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழா
தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டியை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பெத்தாங் போட்டி முருங்கப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கின்ற தட்சிணாமூர்த்தி மற்றும் முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மன் ஆலய முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் பெத்தாங் விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் சுமார் 300 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில்…
Read more: புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழா
- கோவையில் கன்சல்டன்ஸ் பிரிமியர் லீக் மூன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டி
கோவையில் கன்சல்டன்ட்ஸ் பிரிமியர் லீக் எனும் சி.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது… பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் கல்வித்துறை நிபுணர்கள் சார்பாக மூன்றாவது சீசனாக நடைபெற்ற இதில் கேரளா,கர்நாடகா,தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த 10 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்… முன்னதாக போட்டிகளுக்கான துவக்க விழா சி.பி.எல்.தலைவர் மனோஜ் மானயத்தோடி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் செயலர் நீல்ராஜ் மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் ஆலோசகர்களை இணைக்கும் வகையில் நடைபெற்ற சி.பி.எல்.போட்டிகளை கோயம்புத்தூர் சிங்கம்ஸ் அணியினர் ஒருங்கிணைத்தனர்… நான்கு நாட்கள் லீக் போட்டிகளாக நடைபெற உள்ள இது குறித்து ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கூறுகையில், தென் மாநிலங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுவதாகவும்,குறிப்பாக மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட பகுதியாக கோவை உள்ள…
Read more: கோவையில் கன்சல்டன்ஸ் பிரிமியர் லீக் மூன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டி
- கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா
கோவை,சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாற்பதாம் ஆண்டு மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. எஸ்.பி. ஓ.ஏ. கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நிதிஷ் ஆன்ட்ரெயா ராஜா சிங் தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலர் மற்றும் தாளாளர் செந்தில் ரமேஷ் துவக்கவுரையாற்றினார். கோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் தாளாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.. பள்ளியின் முதல்வர் சபுரால் பானு இப்ராஹீம் பள்ளியின் ஆண்டு அறிக்கையையும் சமர்ப்பித்தார். முன்னதாக நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச பாரா விளையாட்டு வீராங்கனை கிருத்திகா ஜெயச்சந்திரன் பங்கேற்றுத் தேசியக் கொடியை ஏற்றி, மாணவ மாணவியரின் அணிவகுப்பை ஏற்று விளையாட்டு விழாவினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். இதில் மாணவ,மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் பள்ளியின் நாற்பதாம் ஆண்டு மாணிக்க விழா.”சமஸ்கிருத்திக் தரோஹர்” ஆசிய கலாச்சாரம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில்…
Read more: கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா
- தஞ்சாவூர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான கிரிக்கெட் போட்டி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான “சச்சின் ஜெய் – கிட்டு நினைவு கோப்பை” 2024-ம் ஆண்டுக்கான இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியை வரை தூய.பீட்டர்ஸ் பள்ளி மைதானம் மற்றும் கிட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் காளிதாஸ் வாண்டையார் போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 9 பள்ளின் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இறுதிப்போட்டி வருகின்ற சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது. முன்னதாக விழாவின் தொடக்கத்தில் சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளையின் நிர்வாகத் தாளாளர் பாலாஜி நன்றியுரை வழங்கினார்.
- தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் பேண்டு வாத்தியக்குழு, என்.சி.சி தரைப்படை, விமானப்படை, கப்பற்படை, சாரணர்படை, சாலை பாதுகாப்பு மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப்படை, சேம்பியன்ஸ், ஐகான்ஸ், லெஜண்ட்ஸ் மற்றும் வாரியர்ஸ் மாணவ அணியினர் அணிவகுப்பு நடத்தினர். இவ்விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாணவர்களின் ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 100 மீ, 800 மீ, 4 × 100 மீ தொடர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுரேஷ்குமார் பரிசளித்துப் பாராட்டினார். இசைக்குழு மாணவர்களின் இசை நிகழ்ச்சி, பிரைமரி குழந்தைகளின் காவடியாட்டம், கும்மியாட்டம், பட்டாம்பூச்சி நடனம், கிளாப் நடனம், படுகா நடனம், புலியாட்டம்,…
Read more: தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா!
- உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரம்
தி. உதயசூரியன். டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வாடிப்பட்டி செய்தியாளர்:செல் 8098791598 உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரம் அலங்காநல்லூர் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாலமேடு பேரூராட்சி சார்பில் வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, தகர செட்டு அமைத்தல் இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் ராமராஜ், மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தற்காலிக கழிப்பறை வசதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கண்டு…
Read more: உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரம்
- மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள் 5347 மாடு பிடி வீரர்கள் தயார்
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள் 5347 மாடு பிடி வீரர்கள் தயார்… ஆன்லைன் முன்பதிவு நிறைவு. மதுரை, அவனியாபுரம், பால மேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள், 5,347 மாடு பிடி வீரர்கள் பதிவுசெய்துள்ள நிலையில் முன்பதிவு நேற்று மாலையுடன் முடிந்தது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 14ல் அவனியாபுரம், ஜன. 15ல் பாலமேடு மற்றும் ஜன. 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள் ளன. இதற்கான பந்தல்கால் நடப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந் துள்ளன. இந்த 3 இடங்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ப தற்கான காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் விபரங்களுடன், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. போட்டிகளின் போது காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உத வியாளர் அனுமதிக்கப் படுகின்றனர். பதிவு விபரங்கள்…
Read more: மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள் 5347 மாடு பிடி வீரர்கள் தயார்
- கேலோ இந்தியா மகளிர் லீக் தேசிய அளவிலான யோகா போட்டி
கேலோ இந்தியா மகளிர் லீக் தேசிய அளவிலான யோகா போட்டி கோவை யோவா யோகா அகாடமி மாணவிகள் பதக்கங்கள் பெற்று அசத்தல் டில்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டியில் யோகா விளையாட்டில் பதக்கம் பெற்று கோவை திரும்பிய யோவா யோகா அகாடமி மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது… கேலோ இந்தியா மகளிர் தேசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது.. இதில் யோகா பிரிவில் இந்தியாவின் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம்,ஆந்திரா,கர்நாடாகா,கேரளா,இராஜஸ்தான், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்… மகளிர்க்காக நடைபெற்ற பிரத்யேக போட்டியில் தமிழக அணி சார்பாக கோவையில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வைஷ்ணவி ஆர்ட்டிஸ்டிக் குரூப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும்,யோவா யோகா அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சக்தி சஞ்சனா…
Read more: கேலோ இந்தியா மகளிர் லீக் தேசிய அளவிலான யோகா போட்டி
- கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஏழு பேர் சாதனை படைத்துள்ளனர்.. மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் அண்மையில் ஆறாவது தேசிய அளவிலான குவான்கிடோ கராத்தே போட்டிகள் நடைபெற்றது… இதில் மகாராஷ்டிரா, கேரளா தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, சண்டிகர் என இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் இருந்தும் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஃபைட்டிங் , குவான், வெப்பன் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் தமிழக அணி சார்பாக கோவையை சேர்ந்த கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் உட்பட ஏழு பேர்…
Read more: கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்
- மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி
மதுரை, ஆயுதப்படை மைதானத்தில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடை பெற்றது.மதுரை மாவட்ட மூத்தோர் தடகள கழகம் சார்பில் 42வது மாநில மூத்தோர் தடகள போட்டி கள் மதுரையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் 30 வயதிற்கு மேல் 90 வயது வரையிலான இருபாலரும் பங்கேற்றனர். முக்கியமாக காவல், வருமான வரி, ரயில்வே துறைகள் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியில் உள்ளோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றியின் அடிப்படையில் தகுதி பெறும் 50 நபர்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பெங்களூரூவில் நடைபெறும் தேசி யப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். தமிழக வீரர்கள் தேசிய போட்டிகளில் கலந்து…
Read more: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி
- ஓசூர் மாநகரில் தென்னிந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள்
ஜி.பி.மார்க்ஸ் செய்தியாளர் ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் school of martial art trust சார்பாக தென்னிந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள TTD திருமண மண்டபத்தில் ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஆரம்பமானது, இந்த மாபெரும் தற்காப்பு கலை போட்டி kyoshi shihabudeen kk8th Dan black belt அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் Rensui rose diogene l5th Dan black belt அவர்களின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற்றது.தமிழ்நாடு,ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கராத்தே,குங்பூ போட்டிகள் தனித்தனி பிரிவாக நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக திரு.அம்ரிஷ், திரு.ராமநாதன், திரு.முனியப்பா, திரு.மகேஷ், திரு.வெங்கடேஷ், திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இந்த…
Read more: ஓசூர் மாநகரில் தென்னிந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள்
- அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் 25 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு 8 கி.மீ. வீராங்கனைகளுக்கு 5 கி.மீ. மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கு 10 கி.மீ.. வீராங்கனைகளுக்கு 5 கி.மீ. என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு. அந்தோணி அதிஷ்டராஜ் அவர்கள்,பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 170 நபர்கள் கலந்து கொண்டார்கள். வெற்றி வீரர். வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ. 5,000/-. இரண்டாம் பரிசு தலா ரூ. 3,000/-.…
Read more: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள்
- அண்ணா பிறந்தநாள்- சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சியாளர் தொடக்கி வைத்தார்
தூத்துக்குடி அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சியாளர் இளம்பகவத் தொடக்கி வைத்தார்அறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு இளைஞர்களிடையே உடன் தகுதி கலாசாரத்தை ஏற்படுத்தும் விதமாக கலந்து கொண்ட சைக்கிள் போட்டியினை தூத்துக்குடி தருவவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் இளம்பகவத். கொடி அசைத்து துவக்கி வைத்தார்
- பாலமேடு ஜல்லிக்கட்டு மூர்த்தக்கால் நடும் விழா
உலகப்புகழ் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு மூர்த்தக்கால் நடும் விழா – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி அலங்காநல்லூர் உலகப்புகழ் அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு விழா 15ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா 16ம் தேதியும் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், பயிற்சி கலெக்டர் வைஷ்ணவிபால், எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள், விழாகுழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. இதேபோன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.…
Read more: பாலமேடு ஜல்லிக்கட்டு மூர்த்தக்கால் நடும் விழா
- மாவட்ட அளவில் நடைபெற்றகபடி போட்டி வெற்றி பெற்ற மாணவிக்கு சிறப்பு பரிசு
காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா 47 தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சித்தாமூர் ஒன்றியம் பெரியகளக்காடி கிராமத்தில் மாவட்ட அளவில் நடை பெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 47 தொடர் நிகழ்ச்சிகள்காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்ஆலோசனைபடி அச்சிறுப்பாக்கம் ஆர்.எஸ்.யுவராஜ் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மாவட்ட அளவில் நடை பெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அக்ஷனாவுக்கு பெரியகளக்காடி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு பரிசு வழங்கினார்.அப்போது கலைக்கூட தலைமை மூத்த பயிற்சியாளர் விக்னேஸ்வரன், வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் பொன்.கே.ராமன், முத்து, சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் 31 டிசம்பர் 2024 நிறைவு
திருவாரூர் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் 27 டிசம்பர் அன்று துவங்கி 31 டிசம்பர் 2024 நிறைவு. தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் நிறைவு விழா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு கிருஷ்ணன் தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டி.மணிகண்டன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் மு. கிருஷ்ணன் பேசுகையில், “தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான கோகோ போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை பேராசிரியர்களை நான் வாழ்த்துகிறேன் கல்வி மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சியும் நம் பிரதான சிந்தனையாக இருக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். யோகா பயிற்சி உடல்…
Read more: பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் 31 டிசம்பர் 2024 நிறைவு
- இரண்டாவது பாரம்பரிய வில்வத்தை தேசிய அளவிலான பயிற்சி முகாம்
இரண்டாவது பாரம்பரிய வில்வத்தை தேசிய அளவிலான பயிற்சி முகாம் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டிசம்பர் மாதம் நடைபெற்றது ஐந்து நாட்கள் நடைபெற்றது PSNA College of Technolog திண்டுக்கல் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தாமதன்குமார் நிறுவனர் பொதுச்செயலாளர் பாரம்பரிய வில்வத்தை சங்கம் ஆப் இந்தியா பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
- சோழவரம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி
சோழவரம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி ; கவுன்சிலர் நாகவேல், தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன், பந்தையடித்து துவக்கி வைப்பு. சோழவரம் ஊராட்சியில் நண்பர் கள் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடைப் பெற்றது.இப் போட்டியினை ஒன் றிய கவுன்சிலர் நாகவேல், சோழ வரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிமுனிகிருஷ்ணன், ஆகி யோர் பந்தை அடித்து துவக்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது சோழவரம் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோழவரம் நண்பர்கள் சார்பில் இரண்டாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப் போட்டியினை சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் 9-வது வார்டு கவுன்சிலர் தேவநேரி நாகவேல், சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனிகிரு ஷ்ணன் ஆகியோர் பந்தையடித்து போட்டியினை தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் ஊராட்சி ஒன்றிய…
Read more: சோழவரம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி
- மாநில அளவிலான கபாடி அணியில் பங்கு பெறும் வீரர்களுக்கு பாராட்டு சீருடை வழங்குதல் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் யூ. 19 கபாடி அணியானது, நாளை 29- ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக தொட்டியம் கொங்கு கல்லூரியில் மாநில அளவில் நடைபெறும் கபாடி அணியில் பங்கு பெறும் வீரர்களுக்கு, பள்ளி வளாகத்தில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர்.ராஜேஷ் , பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் கோ. சரவணன், ராஜேஷ் , பயிற்சியாளர் அர்ஜுன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி, சீருடைகளை வழங்கி கௌரவித்தார்கள்.
- திருமுல்லைவாசல் கடற்கரையில் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி.மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இருபால் அணியினர் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் சார்பாக மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி இன்று துவங்கியது. சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கடற்கரையில் நடைபெறும் போட்டியை புதுச்சேரி கைப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் பெர்லின் ரவி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெறும் கடற்கரை கைப்பந்தாட்ட போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். சென்னை,கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தர்மபுரி, அரியலூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இருபால் அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடற்கரை கைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும் கேடயம் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற உள்ள வீரர்களுடன் காளைமாடுகளை அடக்க்கூடிய பயிற்சி
திண்டுக்கல் அருகே பிள்ளமாநாயக்கன்பட்டி பகுதியில் தை மாதம் தென் மாவட்டங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறக்கூடிய காளைகள் மற்றும் காளைகளை அடக்கக்கூடிய மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல், வாடிவாசல் வழியாக வெளியே வந்து அடக்க முயலும் இளைஞர்களிடமிருந்து திமிறி கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினர். அதேபோல் மாடுபிடி வீரர்கள் சீறிவரும் காளைகளை திமிலை பிடித்து அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
- அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி-மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவன்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் (Pencak Silat) போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவனுக்கு பள்ளி சார்பாக சாரட் வண்டியில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்று உற்சாக வரவேற்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் (5th Junior World Pencak Silat Championship 2024) அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் சொந்த ஊர் வந்தடைந்த பள்ளி மாணவனுக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சாரட் வண்டியில் பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து குட் சமாரிட்டன் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் பிரவீன்…
Read more: அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி-மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவன்
- ஜெயங்கொண்டம் மாடர்ன் கலைக் கல்லூரியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் T 20 கிரிக்கெட் போட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கலைக் கல்லூரியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் T 20 கிரிக்கெட் போட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெறும் மாபெறும் கிரிக்கெட் போட்டி அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்றது இதில் அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்கள் ஆறு குழுவினராக போட்டியில் பங்கேற்கின்றனர் மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் குழுவினர் திருச்சியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் போட்டியிட தகுதி பெற்றவர் ஆவார் இதில் மாடர்ன் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் எம் கே ஆர் சுரேஷ் கிரிக்கெட் மட்டையை பிடித்து போட்டியினை துவக்கி வைத்தார் இதில் அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன் துணைச் செயலாளர் குணாளன் மற்றும் ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கோக்கோ போட்டி டிசம்பர் 27 நடைபெற உள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகத்துக்கான ஆடவர் கோக்கோ போட்டி டிசம்பர் 27 நடைபெற உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை தென் மண்டல பல்கலைக்கழககளுக்கான ஆடவர் கோக்கோ போட்டிகள் நடைபெற உள்ளது இந்தப் போட்டிகளை சுபாஷ் குமார் நிர்வாக இயக்குனர் கோக்கோ பெடரேஷன் 27 டிசம்பர் 27 வது தேதி அன்று காலை 8 மணி அளவில் துவங்கி வைக்கிறார் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் தலைமை வைக்கிறார். ஐந்து நாட்கள் நடைபெற உள்ள, தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆடவர் கோகோ போட்டிகளில் 80 பல்கலைக்கழகங்கள் போட்டியிட பதிவு செய்துள்ளனர் நிகழ்வில் சுமார் 1000 முதல் 1200 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்தப் போட்டிகளை நடத்த நான்கு கொக்கோ மைதானங்கள் மற்றும் இரண்டு உள் விளையாட்டு அரங்கங்களிலும் கொக்கோ விளையாடுவதற்கான தளம்…
Read more: நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கோக்கோ போட்டி டிசம்பர் 27 நடைபெற உள்ளது.
- கோவையில் ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பாக மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி
கோவையில் ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பாக மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.. அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் வளாகத்தில் போட்டி நடைபெற்றது. போட்டிகளை சவுத் ஷட்டில் தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் கல்யாண் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ரோட்டரி கிளப் சவுத் தலைவர் பாலசுப்ரமணியன்,செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டிகளை ரோட்டரி 3201 மாவட்ட துணை ஆளுநர்கள் சென் ராமநாதன்,கல்யாண குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்..ஜி.ஜி.ஆர்.தீபானா முன்னிலை வகித்தார்.. சவுத் ஷட்டில் அல்ட்ரா கோப்பைக்கான போட்டியாக நடைபெற்ற இதில் கோவை,திருப்பூர்,உடுமலை,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.. ஐம்பது வயதுக்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேல் என இருபிரிவுகளில் ஒற்றையர்,மற்றும் இரட்டையர்,கலப்பு பிரிவு என போட்டிகள் நடைபெற்றது.. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சஞ்சய் மற்றும் கவுரி முதலிடத்தையும்,ஷாருக்,மோதிகா…
Read more: கோவையில் ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பாக மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி
- கமுதியில் மினி மாரத்தான் போட்டி
கமுதியில் மினி மாரத்தான் போட்டி: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது போட்டிக்கான ஏற்பாடுகளை மத்தியஒன்றிய செயலாளர் சண்முகநாதன் செய்திருந்தார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு ஓடினார்கள் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் போட்டித்தேர்வுக்கு தயார் ஆகும் புத்தகம் வழங்கப்பட்டது முதல் மூன்று இடங்களை பெற்றவவர்களுக்கு தலா 15000ரூபாய் காசோலை வழங்கப்பட்டது சுமார் 50பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் கலந்துகொண்ட ஒருமாணவிக்கு சிறப்புபரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சிபிரமுகர்கள் கலந்துகொண்டனர்
- கோவையில் தேசியளவிலான கபாடி போட்டி!
கோவை ஆடுகளத்தில் 21 மாநிலத்திலிருந்து வந்துள்ள 26 அணிகள் பலபரிட்சை! சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி தொடரின் 11வது பதிப்பை நடத்துகிறது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு, கோவை பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் யுவா கபடி தொடரின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கே கவுதம் மற்றும் போட்டியின் இயக்குநர் ஹரிஷ் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அவர்கள் பேசுகையில்; இங்கு நடைபெறும் பிரிவு போட்டிகளில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 26 அணிகள் பங்கேற்கின்றன என தெரிவித்தனர். இந்த போட்டிகள் பிரிவு 1,2,3 என மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன எனகூறிய அவர்கள் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 3வது மற்றும் 2வது பிரிவுகளில் தலா 37 போட்டிகளும், 1வது பிரிவில்…
Read more: கோவையில் தேசியளவிலான கபாடி போட்டி!
- கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி
மூன்று வயது முதல் 35 வயது வரையிலான ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள் பெற்று அசத்தல் கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 64 வது கராத்தே பட்டைய தேர்வு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தி்ல் நடைபெற்றது. இதில் பிரவுன், பச்சை, மஞ்சள்,, புளு, ஆரஞ்சு,கருப்பு உள்ளிட்டவற்றில் பட்டையம் வழங்குவதற்கான தேர்வில் 3 வயது முதல் 35 வயது வரை உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் தியாகு நாகராஜ் கலந்து கொண்டு பட்டையம் பெறுவதற்கான கராத்தே போட்டியை நடத்தி வீரர்களை தேர்வு செய்தார். இதில், கட்டா, கராத்தே உள்ளிட்ட…
Read more: கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி
- உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகள் தொடக்கம் – வாடிவாசலில் சிறப்பு பூஜை
அலங்காநல்லூர், உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற ஜனவரி மாதம் 15ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற வலையபட்டி, ஸ்ரீமஞ்சமலை சுவாமி திருக்கோவிலில் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்வில் மடத்து கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் மடத்து கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் பெரியோர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்க உள்ளனர்.
- சீர்காழியில் இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ப்பு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழ்நாடு துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மிக இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்தமிழ்நாடு துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மிக இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மா ரஜினி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார் மேலும் மாவட்ட அளவிலான இந்த போட்டியில் தேர்ச்சி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் அனைவரும் தங்களது முழு திறமையை காட்ட…
Read more: சீர்காழியில் இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ப்பு
- தேனி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் இயங்கி வரும் மாபெரும் கல்வி சிறந்ததொரு நிறுவனமான நாடார் சரஸ்வதி குழுமத்தின் ஒரு அங்கமான நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தவர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இந்த போட்டியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் எம் குரு பிரசாத் 57.60 எடைப்பிரிவில் பங்கு பெற்று மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார் மேலும் பஞ்சாப்…
Read more: தேனி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை
- தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்கள் சாதனை குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்ற கோவை குனியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் கராத்தே,கிக் பாக்சிங்,கூடோ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளை அகாடமியின் நிறுவனர் பிரேம் தலைமையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.. இந்த அகாடமியில் பயின்று வரும் மாணவர்கள் தற்காப்பு கலை போட்டிகளில் மாவட்ட,மாநில,தேசிய அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.. இந்நிலையில் அண்மையில்,குஜராத் மாநிலம் சூரத் நகரில் அண்மையில் தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில்,கலந்து கொண்ட பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்கள் ஒரு தங்கம் உட்பட 13 பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்…
Read more: தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்கள் சாதனை
- போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்று சுகுணா ரிப் வி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு
போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்று சுகுணா ரிப் வி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு மாநில அளவில் நடைபெற்ற போல் வால்ட் எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கோவை சுகுணா ராக் வி பள்ளியில் பயிலும் மாணவி அஸ்வினி தங்கம் வென்று அசத்தல்.. கோவை லட்சுமி புரம் பகுதியை சேர்ந்த மாணவி அஸ்வினி. காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் சுகுணா ரிப் வி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி அஸ்வினி அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொண்டார். இதில் போல் வால்ட் எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட அவர்,2.30 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.. அடுத்து லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாணவிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு…
Read more: போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்று சுகுணா ரிப் வி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு
- உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பளு தூக்கு வீரர் பொதுமக்களுக்கு அறிவுரை
காசு பணம் இரண்டாவது முதலில் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பளு தூக்கு வீரர் பொதுமக்களுக்கு அறிவுரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையை சேர்ந்த தர்மதுரை பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று வெற்றி பெற்று கோவை திரும்பிய அவருக்கு கோவை விமான நிலையத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பளு தூக்கு வீரர் தர்மதுரை:- கடந்த ஓராண்டுகளாக இதற்காக பயிற்சி எடுத்து உலக அளவில் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் வருங்காலத்தில் இது போல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என தெரிவித்தார் தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் 11 நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று இதில் அதிகப்படியாக பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா சேர்ந்தவர்கள் திறமையாக…
Read more: உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பளு தூக்கு வீரர் பொதுமக்களுக்கு அறிவுரை
- 65வது தடகளப் போட்டி-கமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் pole vault போட்டியில் மூன்றாம்
மாநில அளவில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 65வது தடகளப் போட்டியில் கமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் பாஸ்கர் pole vault போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்
- கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி -ஆக்ரோஷமாக வாளை சுழற்றிய மாணவிகள்
கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி -ஆக்ரோஷமாக வாளை சுழற்றிய மாணவிகள் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த துவங்க உள்ளனர்.. இந்நிலையில் கோவையில் மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.. கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பாயில், சேபர், எப்பி’ ஆகிய மூன்று பிரிவின் கீழ், தேர்வு…
Read more: கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி -ஆக்ரோஷமாக வாளை சுழற்றிய மாணவிகள்
- ராஜூக்கள் கல்லூரியில் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான பால் பேட்மிட்டன் போட்டி
மதுரை காமராசர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான பால் பேட்மிட்டன் போட்டி ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை,தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச்சுற்று ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும், திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியும் முன்னேறியது. இதில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியும், மூன்றாம் இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியும், நான்காம் இடத்தை மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியும் பெற்றது. இப் போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ராஜூக்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் முனைவர் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் முனைவர் ரமேஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வித்துறை இயக்குனர்…
Read more: ராஜூக்கள் கல்லூரியில் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான பால் பேட்மிட்டன் போட்டி
- ரோட்டரி கோயம்பத்தூர் ஜெனித் சார்பாக கிரிக்கெட் போட்டி
கோவையில் ஆயிரம் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கோயம்பத்தூர் ஜெனித் சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மைதானத்தில் ரோட்டரி கோயம்பத்தூர் ஜெனித் சார்பாக தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் ஆயிரம் நோயாளிகளுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன. ரெட் டென்னிஸ் பாலில் 8 ஓவர் பிரிவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் DG.AKS.சுந்தரவடிவேல், கௌரவ விருந்தினர்கள் DGE.செல்லா.k.ராகவேந்திரன்,DGN.ஆர்.எஸ். மாருதி ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களுடன் ரொக்க பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள்,ரோட்டரி ஜெனித் சங்க தலைவர் வசந்த், செயலாளர் மதனகோபால்,விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ்,மார்க் ஆபிரஹாம்,கோகுல்ராஜ்,ராஜேஷ்,ரவிராஜ்,மணிகண்டன்,சதீஷ்,தினேஷ் மேத்தா மற்றும் சங்க உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன்,மீனா கோபாலகிருஷ்ணன்,வித்ய…
Read more: ரோட்டரி கோயம்பத்தூர் ஜெனித் சார்பாக கிரிக்கெட் போட்டி
- தேனி மாவட்ட முதலமைச்சர் கோப்பை போட்டி
தேனி மாவட்ட முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஒரு இடம் பெற்று வரலாற்று சாதனை தேனி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி தேனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டிகளில் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தடகள மாணவிகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தனர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க தொகையும் கேடயமும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி கூட்ட அரங்கில் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி நிறுவன செயலாளரும் கம்பம் சட்டமன்ற நிரந்தர உறுப்பினருமான பண்பாளர் என். ராமகிருஷ்ணன் கல்லூரி இணைச் செயலாளர் என் எம்ஆர்.வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆலோசனை குழு…
Read more: தேனி மாவட்ட முதலமைச்சர் கோப்பை போட்டி
- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி தட கள மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி பி பவித்ரா முதலிடத்தையும் போட்டி பரிசான ரூபாய் 3000 ரொக்கத்தையும் பெற்றார் இதேபோல் கல்லூரி வணிக நிர்வாகத்துறை மாணவி பி.மோனிகா இரண்டாம் இடத்தையும் ரூபாய் 2000 ரொக்கபணமும் பெற்றார் இதேபோல் கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டு ரொக்கத்தொகை பாராட்டு கேடயங்களை பெற்றார்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி கூட்ட அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர்…
Read more: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி
- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு விழா
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு விழாவில் வெற்றிக்கான தீபத்தை விளையாட்டு வீராங்கனைகளுக்கு வழங்கினார்உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் போடி ராஜராஜேஸ்வரி சங்கர் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு உள் பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்
- கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள்
கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் – தொடங்கி வைத்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் கோவையில் முதன்முறையாக கலை பொழுதுபோக்கு அமைப்பின் சார்பில் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கே.என்.ஜி.புதூர் சாய் நகர் எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் இரவு – பகல் ஆட்டமாக 2 நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை வகித்தார். துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர். குரூப் எஸ்.ஆர்.மருதாச்சலம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி பச்சைமுத்து, கற்பகம் ராஜ்சேகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.…
Read more: கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள்
- புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கோவையில் துவக்கம்
இந்திய அளவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப் டிசைன்களுக்குபுகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கோவையில் துவக்கம் கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. புதிய கிளை திறப்பு விழாவிற்கு விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் அகில இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார், மற்றும் இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரி மாநிலச் செயலாளர் திரு. வெங்கடேசன். கே மற்றும் கோவை மாவட்ட அனைத்து சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார். ஜே மற்றும் கோவை மாவட்ட அனைத்து சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் (CODCEA) வின் துணைத் தலைவர்…
Read more: புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கோவையில் துவக்கம்
- பொள்ளாச்சியில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கலை நிகழ்ச்சியுடன் துவக்கம்
பொள்ளாச்சியில் 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கலை நிகழ்ச்சியுடன் துவக்கம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி பகுதியில் உள்ள திஷா பள்ளியில் சி. ஐ. எஸ். சி. இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 600 க்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் கலந்து கொள்கின்றனர். டேக்வாண்டோ போட்டி 14,17,19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது 8ம் தேதி துவங்கி 9, 10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்…
Read more: பொள்ளாச்சியில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கலை நிகழ்ச்சியுடன் துவக்கம்
- தேனி முல்லை நகரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையில் விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பாக முல்லை நகரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு பரிசுகளை ஊக்கப்படுத்தி பாராட்டினார் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர்தேனி நகர் செயலாளர் நாராயண பாண்டியன் பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் முகமது இலியாஸ்மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
- திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஆஸ்ரம் பள்ளி மாணவ,மாணவிகள் 12 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.. ஜிம்மி ஜார்ஜ் உள் அரங்கில் கடந்த 4 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இதில் இந்தியா,மலேசியா,ஸ்ரீலங்கா,சிங்கப்பூர்,வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேரந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.. சப் ஜூனியர்,ஜீனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள் பலர் பங்கேற்றனர்.. ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற,இதில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட 10 மாணவர்களும் 20 பதக்கங்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்..…
Read more: திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி
- கோவையில் வரும் அக்டோபர் மாதம் தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி
கோவையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னோட்ட போஸ்டர்களை தேசிய பாராலிம்பிக் பயிற்சியாளரான கம்போடியா நாட்டை சேர்ந்ந சோக்லீப் சோங் வெளியிட்டார்.. கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண்,ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும் கோபிநாத்,லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவனர் சந்தோஷி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் போஸ்டரை,கம்போடியா நாட்டை சேர்ந்த முதன்மை பயிற்சியாளர் சோக்லீப் சோங் வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரா த்ரோ பால் சங்க நிர்வாகிகள்,மாநில அளவில் நடைபெற உள்ள இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள்…
Read more: கோவையில் வரும் அக்டோபர் மாதம் தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி
- ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி- மதுரை ரயில்வே அணி அபார வெற்றி
தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங் களுக்கிடையேயான ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி மதுரையில் துவங்கியது. மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் முதல் நாள் கபடி போட்டிகளை மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் நாகேஸ்வரராவ் துவக்கி வைத்தார். போட்டிகளில் சென்னை, சேலம், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் மோதின. திருச்சி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. சேலம் அணி 13 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது. அடுத்து நடைபெற்ற போட்டியில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் அணிகள் மோதின. இதில் மதுரை அணி 26 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது. மதுரை அணியை எதிர்த்து திருவனந்தபுரம் அணி 9 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. மதுரையில் நடைபெறும் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அகில இந்திய ரயில்வே…
Read more: ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி- மதுரை ரயில்வே அணி அபார வெற்றி
- கோவையில் 58 – ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 9 முதல் 13 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது
கடந்த 57 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 58-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் . எல். கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ர மூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் . பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- இவ்வாண்டு 58-வது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 9 – ம் தேதி முதல் 13 – ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடனும், தமிழ்நாடு…
Read more: கோவையில் 58 – ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 9 முதல் 13 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது
- டெக்சியனில் வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் டெக்சியணில் பயிற்சி பெற உள்ளனர் பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பணியாளர் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டெக்சியன், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப ஆர்வமுள்ள திறமைகளை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்தானது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆற்றல் சார் மையம் மாணவர்களை மேம்படுத்துவதற்கும் மறுதிறன் வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியில் Dexian இன் பங்கு பாடத்திட்ட மேம்பாடு, வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, பட்டதாரிகள் தொழில் நிறுவனங்களுக்கு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது. இதன்படி CUTN மற்றும் Dexian ஆகியவற்றின் கடுமையான தேர்வு செயல்முறையின் மூலம் கணினி அறிவியல், கணிதம், புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருந்து 18…
Read more: டெக்சியனில் வேலை வாய்ப்புகள்
- கோவையில் ப்ளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2024 போட்டி
கோவையில் நடைபெற்ற ப்ளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் ஆதித்யா தாகூர் முதலிடம் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான எப்.எம்.எஸ். சி.ஐ.. கார் ராலி சாம்பியன்ஷிப் மூன்றாம் சுற்றில், ஆதித்யா தாகூர் முதலிடம் பிடித்தார். புளுபேண்ட் எப். எம்.எஸ்.சி.ஐ., இந்திய தேசிய ரேலி சாம்பியன் ஷிப்2024ன் மூன்றாம் சுற்றுப்போட்டிகள் கோவையில் நடந்தன. எட்டு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 67 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் நாள் போட்டிகள்,எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.எம்.,ஆக்ரோ வளாகத்திலும், இரண்டாம் நாள் போட்டிகள் கேத்தனூரிலும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்கள் ஐ.என்.ஆர்.சி., ஓட்டுமொத்தசாம்பியன் ஷிப் பிரிவில் ஆதித்யா தாகூர், விரேந்தர் கேஷப் முதலிடம், கர்ணாகடூர், மூசா செரிப் இரண்டாம் இடம் பிடித்தனர். ஐ.என்.ஆர்.சி.,2 ஆதித்யா தாகூர், விரேந் தர்கேஷப்: ஐ.என்.ஆர்.சி., 3 பிரிவில் ஜிட்ஜாபக், சேகர்: ஜே.என்.ஆர்.சி., பிரிவில் அபின்ராய், மொய்தீன் ஜஷீர்; பெண்கள்…
Read more: கோவையில் ப்ளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2024 போட்டி
- கோவையில் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள்
கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது..இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 28 ஆம் ஆண்டு தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.. முன்னதாக இதன் துவக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவன் தலைமையில் நடைபெற்றது. தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகத்தின் தலைவர் அமிர்தராஜ்,செயலர் விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில்,, ஸ்டார் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் செந்தில் நாதன் முன்னிலை வகித்தார். சேரிபாளையம் அரசு பள்ளி,உடற்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக, வெள்ளலூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ் செல்வன்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி உதவி பேராசிரியர் பாலசுந்தர்,ஆகியோர் கலந்து கொண்டனர்.. ஹோப்ஸ் வாக்கர்ஸ் கிளப் செயலர் மௌனசாமி…
Read more: கோவையில் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள்
- ஊத்தங்கரையில் கிரிக்கெட் போட்டி -பத்திரிக்கையாளர்கள் பங்கேற்பு
சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூரில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு தொகையான ரூ 8000 ஆயிரத்தை அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் டிஆர்,கவியரசு, தேசிய செயலாளர் மாலைமுரசு ம,ராஜாராம்,மாநில ஒருங்கிணைப்பாளர் மு,அருள்,கிராம நிர்வாக அலுவலர் வேப்பிலைப்பட்டி சிலம்பரசன்,முப்பால் நிருபர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சார்பாக பரிசு தொகை வழங்கி பாராட்டு தெரிவித்த போது, உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மத்திய ஒன்றியதிமுக துணை செயலாளர் முத்துமாணிக்கம் மற்றும் விழா குழுவினர் உடன் உள்ளனர்,
- பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை
தூத்துக்குடி. போதை போன்ற தவறான வழிகளில் இளைஞர்கள் போகக்கூடாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஸ்பிக்நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர்கள் தின விழா மற்றும் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ் தலைமை வகித்தார்.இவ்விழாவின் போது, பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா, தனது முதுகில் 30.3 கிலோ எடையுள்ள பாரத்தை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 3 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் விளையாட்டில் ஈடுபட்டு, 366 சுற்றுகளை பெற்று உலக சாதனை படைத்தார். இதன் நடுவர்களாக நோபெல் உலக சாதனை நிறுவனத்தின் மாநில தலைமை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தேசிய அமைப்பாளர் எம்.கே.பரத் குமார் ஆகியோர் இருந்தனர். இதனை தொடர்ந்து, ஆர்யா உலக சாதனை பெற்றுள்ளதாக, நடுவர்கள் அறிவித்ததுடன், அவருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை…
Read more: பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை
- கோவையில் பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி
கோவையில் பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டியில் கோவை, மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 78 அணிகள் பங்கேற்றனர். கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 45 வது ஆண்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் காளப்பட்டி பகுதியில் உள்ள அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான நடைபெற்ற போட்டியில்,கோவை,பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம்,கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகளை சேர்ந்த 78 அணிகள் கலந்து கொண்டன… 5 தனித்தனி கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பந்தை லாவகமாக மாணவர்கள் அடித்து விளையாடினர்..நாக் அவுட் முறையில் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் சிறந்த வீர்ர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்வி கற்பதோடு விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன் ராமச்சந்திரன் தெரிவித்தனர்.
- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி மைதானம்-அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார்
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷ ஜீவனா நிதியிலிருந்து ரூபாய் 31.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷ ஜீவனா முன்னிலையில் திறந்து வைத்தார் உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் கே எஸ் சரவணகுமார் பெரியகுளம் ஆ மகாராஜன் ஆண்டிபட்டி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா நல்லதம்பி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- உலக கோப்பை யோகா போட்டி- இராஜபாளையம், வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு
சவுதி அரேபிய நாட்டில் நடைபெற உள்ள உலக கோப்பை யோகா போட்டிக்கு இராஜபாளையம், வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.. சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக இண்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் (IYSF) எனும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பை யோகா போட்டிக்கான வீரர்,வீராங்கனைளை தேர்வு செய்வதற்கான போட்டிகளை நடத்தி வருகின்றனர். அதன் படி மும்பையில் நடைபெற்ற தேர்வு போட்டியில் கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, பாண்டிச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒண்பதாம் வகுப்பு பயின்று வரும், ஸ்ரீவில்லிபுத்தூர். கம்மாப்பட்டியைச் சேர்ந்த மாணவி…
Read more: உலக கோப்பை யோகா போட்டி- இராஜபாளையம், வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு
- தென்காசியில் டேபிள் டென்னிஸ் போட்டி-ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு தங்கம்
தென்காசியில் டேபிள் டென்னிஸ் போட்டி-ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு தங்கம் – வெள்ளி பதக்கம் தென்காசியில் நடைபெற்ற மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில் குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். தென்காசி கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் எம் எஸ் எஸ் சி மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது . போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் சகரியா, மாணவி பிரபாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றுதங்கப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் சர்வேஸ்வர் மணிவண்ணன், ஐசக் டேனியல் ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர். இரட்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் மாதுரி, ஜோதி பிரியா, முகம்மது இஸ்மாயில், ஐசக் டேனியல், ஆகாஷ், சமிக்தா, சஞ்சனா தேவி, சகரியா ஆகியோர்…
Read more: தென்காசியில் டேபிள் டென்னிஸ் போட்டி-ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு தங்கம்
- வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த பொதுக்குழுக் கூட்டம்
2024 -25 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்த வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அதற்கான பொதுக்குழுக்கூட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வரும் IPAAவின் தலைவருமான ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். முதல்வரின் நேர்முக உதவியாளர் இரா. வேல்முருகன் வரவேற்றார். துறைத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 200 பாலிடெக்னிக் கல்லூரி உடற் கல்வி இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுச் சான்றிதழ்கள் தற்போது பி ஈ படிப்பதற்க மட்டும் பயனுள்ளதாக உள்ளது . இதனை அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் பயனுள்ளதாக மாற்ற அரசை அணுகவேண்டும் என்ற தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கேரம் செஸ் டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளை வலங்கைமானில் நடத்தவும் தீர்மானிக்க பட்டது. முடிவில் உடற் கல்வி இயக்குநர் அகஸ்டின் ஞான ராஜ் நன்றி கூறினார்.
- கோவையில் நடைபெற்ற 21 வது வெங்கடேசலு நினைவு கோப்பை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
கோவையில் 21 வது வெங்கடேசலு நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.. மாணவர் மற்றும் மாணவியருக்கான இப்போட்டி 14 வயதுக்கு கீழ் மற்றும் 19 வயதுக்கு கீழ் என இரு பிரிவுகளாக நடைபெற்றது..கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 140 அணிகள் கலந்து கொண்டன.. நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி நடைபெற்றன.தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில்,அகர்வால் பள்ளியும்,மாணவர் பிரிவில் ஏ.பி.சி பள்ளியும் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பிற்றினர்.இதே போல 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ஏ.பி.சி.அணியும்,மாணவர் பிரிவில் அகர்வால் அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,சுகுணா மோட்டார்ஸ் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற…
Read more: கோவையில் நடைபெற்ற 21 வது வெங்கடேசலு நினைவு கோப்பை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
- தேசிய அளவிலான யோகா போட்டி ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பிடித்து சாதனை
கோவை விளாங்குறச்சி ஆர்.ஜே.பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி என்.பி.ஹரிணி தேசிய அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.. கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்த நிவாஸ்,பிரியா தம்பதியரின் மகள் ஹரிணி.அதே பகுதியில் உள்ள ஆர்.ஜே.பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹரிணி சிறு வயது முதலே யோகாவில் பல்வேறு மாவட்ட,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இந்நிலையில்,அண்மையில்,உத்தரகாண்ட் மாநிலத்தில்,யுனிவர்சல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பாக, இந்தியன் நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி நடைபெற்றது…இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் , சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட இரண்டு பேரில் ஒருவராக கோவை மாணவி என். பி. ஹரிணி கலந்து கொண்டார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஹரிணி பல்வேறு ஆசனங்களை அசத்தலாக செய்து தன் திறமையை முழுவதும்…
Read more: தேசிய அளவிலான யோகா போட்டி ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பிடித்து சாதனை
- திருத்துறைப்பூண்டியில் சிலம்பம் மற்றும் கராத்தேவில் உலக சாதனை நிகழ்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்தூஸ் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் செங்காந்தள் சிலம்பம் கலைக்கூடம் இணைந்து நடத்திய ஆரஞ்சு உலக சாதனை நிகழ்ச்சி மிக சிறப்பாக ஜூன் 30 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது . முதலில் கராத்தே ஒரு மணி நேரம் பயிற்சி சாதனையும், இடைவிடாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உலக சாதனை செய்தனர். இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஆரஞ்சு உலக சாதனை நிறுவனர் மதன் குமார் தலைமை தாங்கினார், முத்தூஸ் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்புரையாற்றினார். இந்த சாதனை நிகழ்வில் திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், உன்னால் முடியும் தம்பி நிறுவனர் கோவிந்தராஜ், விக்டரி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராமலிங்கம், திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை…
Read more: திருத்துறைப்பூண்டியில் சிலம்பம் மற்றும் கராத்தேவில் உலக சாதனை நிகழ்வு
- கோ க்ரீன் மாரத்தான் (GO Green Marathon) தொடர் ஓட்ட நிகழ்வு வருகின்ற ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது
கோவை சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டி அருகே புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் (GO Green Marathon) தொடர் ஓட்ட நிகழ்வு வருகின்ற ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற உள்ள,இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் டி-ஷர்ட் அறிமுக விழா புரோஜோன் மாலில் நடைபெற்றது.இதில் புரோசோன் மால் நிர்வாக அதிகாரிகள் விஜய் பாட்டியா,பாபு,பிரிங்ஸ்டன் நாதன்,முஷம்மல்,சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் டி ஷர்ட்டை அறிமுகம் செய்து வைத்து பேசினர். ஜூலை 30ந்தேதி நடைபெற உள்ள,போட்டயை கோவை மாநகர காவல்திறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைப்பதாக கூறிய அவர்,மாரத்தான் போட்டியில் பல்வேறு திரை பிரபலங்கள்,முக்கியஸ்தர்கள் என 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.. இந்த மாரத்தான் போட்டியில் குழந்தைகள்,ஆண்,பெண்கள் என பிரிவுகளாக நடைபெற உள்ளதாகவும், போட்டியில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கட்டணம்…
Read more: கோ க்ரீன் மாரத்தான் (GO Green Marathon) தொடர் ஓட்ட நிகழ்வு வருகின்ற ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது
- இலங்கையில் கராத்தே போட்டி-தங்க பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர்-இலங்கை கொழும்பு நகரில் 14வது சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, நேபால், ஈரான், ஈராக், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்து சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர் இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் கத்தா பிரிவில் வர்னேஷ் தங்கம் பதக்கம் வென்றார். கத்தா பிரிவில் கிருஷாந்த் வெள்ளி பதக்கம் வென்றனர். மங்கனங்காடு கனிஷ்கா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். எத்திஷ் ராஜன் தங்க பதக்கமும் திபின், தருண், நித்ய ஶ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றனர். இலங்கையில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் ஸ்டாலின் கூறுகையில், இலங்கையில் நடந்த போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றோம். தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு…
Read more: இலங்கையில் கராத்தே போட்டி-தங்க பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- கோவையில் தேசிய அளவிலான ஓபன் யோகா சாம்பியன் ஷிப் போட்டி
யோகா தினத்தை முன்னிட்டு யோவா யோகா அகாடமி சார்பில் தேசிய அளவிலான ஓபன் யோகா சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடைபெற்றது. யோவா யோகா அகாடமி, டெக்த்லான் ஆகியோர் இணைந்து 10வது இன்டர்நேஷனல் யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான ஓபன் யோகா சாம்பியன்ஷிப் போட்டி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள டெக்த்லான் வளாகத்தில் நடைபெற்றது. கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த யோவா யோகா பயிற்சி பள்ளியின் ஆசிரியர் வைஷ்ணவி முன்னிலையில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம்,கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நடைபெற்ற இந்த போட்டியில்,பெண்கள் பிரிவில்,சக்தி சஞ்சனா முதல் இடம் பிடித்து சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றார்.இரண்டாம் இடத்தை,பாவியா ஸ்ரீ,மூன்றாம் இடத்தை சோபிகா ஆகியோர் பிடித்தனர்.. ஆண்கள் பிரிவில்,முதல் இடத்தை விக்னேஷ் பிடித்து சாம்பியன் ஆப் சாம்பியன் வென்றார் இரண்டாம் இடத்தை ஹரீஷ்,மூன்றாம் இடத்தை…
Read more: கோவையில் தேசிய அளவிலான ஓபன் யோகா சாம்பியன் ஷிப் போட்டி
- தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி
தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டியானது போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் எதிரான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் இயேசு பாதம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இதில் ஆண்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெண்கள் போன்றோர் அதிக அளவில் கலந்து கொண்டனர் இதில் இந்த தொடர் பந்தயத்தில் பெண்கள் பிரிவில் முதல் பரிசானது சுபதா ஸ்ரீ இரண்டாம் பரிசு குமுதா மூன்றாம் பரிசு கீர்த்திகா ஆண்கள் பிரிவில் முதல் பரிசு லோகேஷ் இரண்டாம் பரிசு அன்பரசு மூன்றாவது பரிசு நவீன் குமார் வெற்றி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு ரமேஷ் தடகள அமைப்பு பிரசிடெண்ட் டி. எஸ்.…
Read more: தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி
- தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி- இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாணவிகள்
தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை வீராங்கனைகள்.ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு அரசு உதவி செய்தால் மேலும் பல பதக்கங்களை குவிப்போம் என நம்பிக்கை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இதில், பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் மகேஷ், வைதேகி ஆகிய இரண்டு மாணவிகள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று…
Read more: தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி- இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாணவிகள்
- குத்துச்சண்டை போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன்
தேசிய அளவிலான வாகோ இந்தியா இளையவர் குத்துச்சண்டை போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன் தமிழக அரசு உதவியால் தான் தங்கம் வென்று இருக்கேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கு நன்றி சொன்ன தமிழகத்தின் தங்கமங்கை விளையாட்டு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை மத்திய அமைச்சர் L.முருகனை சந்திக்க வேண்டும் என கோரிக்கை மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான வாகோ இந்தியா இளையவர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.இதில் நாடு முழுவதிலிருந்து 27 மாநிலங்கள் பங்கு பெற்றனர். 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. தொடரின் ஆரம்பம் முதலில் தனது ஆதிக்கத்தை செலுத்திய நிவேதா முதல் நான்கு போட்டியில் டெக்னிக்கல் நாக் டவுன் முறையில் 45 நொடியில் போட்டியை முடித்து வெற்றி பெற்றார். கிக்…
Read more: குத்துச்சண்டை போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன்
- பிலாக்குறிச்சி கிராமத்தில் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க நிரந்தர தலைவருமான காடுவெட்டி ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ம் ஆண்டு கபடி திருவிழா பிகே ஸ்போர்ட்ஸ் மற்றும் அரியலூர் மாவட்ட அமைச்சூர் கபாடி கழகம் சார்பில் நடைபெற்றது இதில் பாமக மாவட்ட கவுன்சிலர் வசந்தமணி செல்ல ரவி , பாஜக செந்துறை ஒன்றிய செயலாளர் சிவசங்கர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர் மூன்று நாட்களாக நடைபெறும் இந்த கபடி போட்டியில் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன போட்டியின் முதல் நாளான நேற்று மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது. முன்னதாக சிவன் கோவிலில் இருந்து கபடி வீரர்- வீராங்கனைகளை மேளதாளங்களுடன் ஊர்வலமாக விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்றனர்…
Read more: பிலாக்குறிச்சி கிராமத்தில் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி. வெங்கடேசன் , சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சமூக ஆர்வலர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் பங்கேற்று, சர்வதேச யோகா தினம் பற்றியும், உடல் நலமும் மன நலமும் சரியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும் எனவும், எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினசரி செய்திட வேண்டும் என்று கூறினார். மேலும் ஊட்டச்சத்து மிக்க…
Read more: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
- தேசிய அளவிலான வூசு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்திய தமிழக அணி
தேசிய அளவிலான வூசு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்திய தமிழக அணியில் விளையாடிய கோவை வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.. கர்நாடகா மாநிலம்,பாகல்கோட் பகுதியில் கேலோ இந்தியா பெண்களுக்கான வூசு போட்டிகள் கடந்த 10 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இதில்,மகாராஷ்டிரா,பஞ்சாப்,உத்தரப் பிரதேசம்,கேரளா,கர்நாடாகா,ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.சப் ஜூனியர்,ஜீனியர்,சீனியர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இதில், தமிழ்நாடு அணிசார்பாக,கோவை,வேலூர்,சேலம்,திண்டுக்கல்,சென்னை,தஞ்சை,திருவள்ளூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பள்ளி,கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.. சான்சூ,டாவ்லூ ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கோவையை சேர்ந்த வீராங்கனைகள் ஆறு தங்கம்,ஒரு வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.அதே போல ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழக அணி வென்றுள்ளது.இதற்கு தமிழ்நாடு வூசு விளையாட்டு சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவை இரயில் நிலையம்…
Read more: தேசிய அளவிலான வூசு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்திய தமிழக அணி
- தேசிய கூடோ விளையாட்டில் ஒன்பது பதக்கங்கள் வென்று கோவை வீரர்,வீராங்கனைகள் சாதனை
கோவை-கராத்தே, ஜூஜோஸ் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை ஒருங்கிணைத்த விளையாட்டாக,உள்ள கூடோ தற்காப்பு கலை விளையாட்டை தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.. இந்நிலையில்,தேசிய அளவிலான இரண்டாவது போட்டிகள், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலான் பகுதியில் நடைபெற்றது. இதில்,மகாராஷ்டிரா,கர்நாடகா,கேரளா,உத்தரபிரதேசம்,அரியானா என இந்தியாவின் சுமார் , 25 மாநிலங்களில் இருந்தும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.. தமிழ்நாடு அணி சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி,டைட்டன்ஸ் எம்.எம்.ஏ.கிளப்,மற்றும் ஷான் அகாடமி கிளப் ஆகிய மையங்களை சேர்ந்த 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.. 9 வயது முதல் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் வெவ்வேறு பிரிவுகளில் ஒரு தங்கம்,மூன்று வெள்ளி,ஐந்து வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.. இந்நிலையில் கோவை திரும்பிய கூடோ விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி வளாகத்தில் உற்சாக வரவேற்பு…
Read more: தேசிய கூடோ விளையாட்டில் ஒன்பது பதக்கங்கள் வென்று கோவை வீரர்,வீராங்கனைகள் சாதனை
- கோவை சூலூர் ரௌத்திரம் அகாடமி மாணவர்கள் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம்
அந்தமானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில், 10 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்று கோவை சூலூர் ரௌத்திரம் அகாடமி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.. கோவை சூலூர் பகுதியில் உள்ள ரௌத்திரம் அகாடமியில் தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம் உள்ளிட்ட கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்..இந்த நிலையில்,யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ரௌத்தி்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ,மாணவிகள் சுமார் 13 பேர் கலந்து கொண்டனர்.. ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு ,வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், 13 ,15 ,17 ,19,,21 ஆகிய…
Read more: கோவை சூலூர் ரௌத்திரம் அகாடமி மாணவர்கள் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம்
- அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டி-யுத்த வர்ம அகடாமி விளையாட்டு சங்கம் வீரர் வீராங்கனைகள் அசத்தல்
அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 33 தங்கம் 10 வெள்ளி எட்டு வெண்கலம் என்று அசத்திய யுத்த வர்ம போர்களை அகடாமி விளையாட்டு சங்கம் வீரர் வீராங்கனைகள் அசத்தல் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. அந்தமானில் முதல்முறையாக நடைபெற்ற சிலம்ப போட்டியில் யுத்த வர்மா சிலம்ப போர் கலை அகடாமி விளையாட்டு சங்கம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பம் தற்போது உலக பிரசித்தி பெற்றுஉள்ளது. இந்நிலையில் சிலம்பப்போட்டியே நடைபெறாத அந்தமானில் முதல் முறையாக யூத் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா தேசிய செயளாலர் திரு u.விஜயன் மாநில தலைவர் R.சொந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் சிலம்ப ஆசான் சண்முகம் ஏற்பாட்டின் பேரில் சென்னை திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்கலை அகாடமி விளையாட்டு சங்கம் இணைந்து கடந்த ஜுன் 2ம்தேதி அந்தமான் தமிழர் சங்கத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்தநிகழ்ச்சியில் இந்தியாவின் பல மாநிலங்களிருந்து…
Read more: அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டி-யுத்த வர்ம அகடாமி விளையாட்டு சங்கம் வீரர் வீராங்கனைகள் அசத்தல்
- பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடைகால ஹாக்கி பயிற்சி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் Hockey Unit Dharmapuri சார்பாக நடைபெற்ற கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் (20/05/24 முதல் 02/06/24) இனிதே முடிவற்றது, இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக தலைவர் மாரியப்பன் ரங்கநாதன் முனியப்பன் ( பொருளாளர் ), குமார், உதவி செயலாளர், மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள் இதில் திரளான விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
- தமிழ் பாரம்பரிய சிலம்பம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு , வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு,போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது. மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் பலர் பல்வேறு உலக சாதனைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வரும், கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பு கிருஷ்ணன்,லாவண்யா தம்பதியரின் மகன்.கோகுல் கிருஷ்ணா, உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம்,வாள் மற்றும் சுருள் வாள் வீச்சு,மான் கொம்பு வீச்சு என ஐந்து தமிழ் பாரம்பரிய ஆயுதங்களை பயன்படுத்தி ஒரே மேடையில் தொடர்ந்து பதினோரு மணி நேரம் செய்து சாதனை…
Read more: தமிழ் பாரம்பரிய சிலம்பம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம்
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் என 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.. தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. லிங்கான் யுனிவர்சிட்டி கல்லூரியில், நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியில் பயிலும்,மூன்று வயது முதலான குழந்தைகள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இதில், ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன..இதில்,கலந்து…
Read more: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம்
- பள்ளி மாணவிகளும் தற்காப்பு கலையான சிலம்பம் பயில வேண்டும்- சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி பேட்டி.
பள்ளி மாணவிகளும் தற்காப்பு கலையான சிலம்பம் பயில வேண்டும் சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி கல்பாக்கத்தில் பேட்டி. திருக்கழுக்குன்றம் ஜூன் 01 செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ் கல்பாக்கம் (சிஐஎஸ் எப்) மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரியும் இவரது மகள் ஏஞ்சலின் அணு ஆற்றல் மத்திய பள்ளி 1 ல் பத்தாம் வகுப்பு பயில்கிறார் சிறு வயது முதலே சிலம்பம் மீதும் தமிழ் மொழி மீதும் அளவில்லா பற்று கொண்டவராக திகழ்ந்தார் அதனால் சிறு வயது முதல் சிலம்பம் கற்று வந்தார் இதற்கிடையில் பள்ளியின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் போதிதர்மா சிலம்ப வகுப்பில் சேர்ந்து சிலம்பத்தில் படிப்படியாக தேறினார் சிலம்பத்தில் நன்கு தேர்ந்த ஏஞ்சலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற சிலம்பம் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் பல அணிகள் பங்கேற்ற போட்டியில் நீல கம்பு…
Read more: பள்ளி மாணவிகளும் தற்காப்பு கலையான சிலம்பம் பயில வேண்டும்- சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி பேட்டி.
- உலக சிலம்பம் போட்டி-தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர்
உலக சிலம்பம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி. உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி மலேசியாவில் கடந்த மே 25ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடைபெற்றது மேலும் இந்த போட்டியில் மலேசியா இந்தியா கத்தார் துபாய் ஸ்ரீலங்கா சுவிட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் இருந்து 800-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு உட்பட பல மாநிலத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பன்னிரு கலைஞர் கழகத்தின் மூலம் குளோபல் சிலபம் அகாடமி பள்ளி வழியாக 26 மாணவ மாணவியர்கள் மலேசியாவில் நடைபெற்ற உலக…
Read more: உலக சிலம்பம் போட்டி-தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர்
- உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி
உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி மலேசியாவில் கடந்த மே 25ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடைபெற்றது இந்த போட்டியை தமிழகத்தைச் சேர்ந்த எம்பி கனிமொழி சோமு அவர்கள் போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த போட்டியில் மலேசியா இந்தியா கத்தார் துபாய் ஸ்ரீலங்கா சுவிட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் இருந்து 800-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு உட்பட பல மாநிலத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சிலம்பம் போட்டியில் தமிழகத்திலிருந்து வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் ஒரு தங்கம் உட்பட ஆறு வெங்கலம் பதக்கங்களை கைப்பற்றி அசத்தினார்கள் அவர்கள் மலேசியாவில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் என…
Read more: உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி
- மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே போட்டி-தங்கப் பதக்கங்களை குவித்த மாணவ மாணவியர்கள்
மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த மாணவ மாணவியர்கள் சென்னை விமான நிலையம் வருகை . மலேசியாவில் உலக அளவிலான கராத்தே போட்டி மே மாதம் 26 நடைபெற்றது. இதில் மொத்தம் இந்தியா ஸ்ரீலங்கா மலேசியா ஜப்பான் யூ.கே உள்ளிட்ட 11 நாடுகள் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் இதில் இந்தியா சார்பாக தமிழகம் மற்றும் மும்பையை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் இதில்இந்தியாவின் சார்பாக பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குளுனி பள்ளி- சேலம், சாரதா மெட்ரிக் பள்ளி-சேலம், செயின்ட் ஜோசப் பள்ளி-சேலம், குளுனி வித்தியா நிகேதேன் பள்ளியை சார்ந்த மாணவர்கள் 3 மாணவிகள் 24 பேர் பங்கு பெற்றனர். இந்த உலக அளவிலான கராத்தே போட்டியில் தனி நபர் கட்டாவில் 24 பதக்கங்களும் குரூப் கட்டாவில் 26 பதக்கங்களும் மொத்தம் 29 தங்கம் 9 வெள்ளி 13 வெண்கலம் பதக்கங்கள்…
Read more: மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே போட்டி-தங்கப் பதக்கங்களை குவித்த மாணவ மாணவியர்கள்
- பேயனூர் கிராமத்தில் 15 ஆம் ஆண்டு கபடி போட்டி
செய்தியாளர் மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர் கிராமத்தில் கலை பிரதர்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டிக்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், கொம்மம்பட்டு தொழிலதிபர் அர்ஜுனன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சிமன்ற தலைவர்கள் உப்பாரப்பட்டி செல்வகுமார், கோவிந்தாபுரம் லட்சுமணன், கெங்கப்பிராம்பட்டி வெங்கடேசன், பேயனூர் ஊர் கவுண்டர் சம்பத், தர்மகர்த்தா ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாநில கபடி வீரர் விதுரன், மாவட்ட கபடி சங்கத் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் நாள் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் 20 அணிகள் கலந்துக்கொண்டது. அதில் மொரப்பூர் அண்ணைபிரதர்ஸ் அணி முதல் பரிசாக 15,015 ரூபாய், தர்மபுரி தமிழன் பிரதர்ஸ் இரண்டாம் பரிசாக 10,015 ரூபாய், பேயனூர் ஸ்போட்ஸ் கிளப் மூன்றாம் பரிசாக 7,015…
Read more: பேயனூர் கிராமத்தில் 15 ஆம் ஆண்டு கபடி போட்டி